Home /News /automobile /

பொதுமக்களுக்கான வாடகை சைக்கிள் திட்டம் வெற்றி - 4 மாதங்களில் 13 ஆயிரம் பயனாளிகள் இணைப்பு

பொதுமக்களுக்கான வாடகை சைக்கிள் திட்டம் வெற்றி - 4 மாதங்களில் 13 ஆயிரம் பயனாளிகள் இணைப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Smart City Bicycle Scheme | மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கான வாடகை சைக்கிள் திட்டம் பெருநகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Jammu, India
இன்றைய சூழலில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, பெருநகரங்களில் அதிக அளவிலான வாகன பயன்பாடு காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறுகிய தொலைவில் சென்று வருவதற்கு கூட மக்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடிய சூழல் நிலவுகிறது.

ஒரு பக்கம் போக்குவரத்து நெருக்கடி, மற்றொரு பக்கம் சுற்றுச்சூழல் பாதிப்பு என பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இவற்றை சமாளிக்கும் வகையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கான வாடகை சைக்கிள் திட்டம் பெருநகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரிலும் கூட பல இடங்களில் இதுபோன்ற வாடகை சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும், அதிக அளவிலான மக்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை. ஆனால், ஜம்மு மாநகரில், ஜம்மு ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் அமைப்பு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது வாடகை சைக்கிள் திட்டம் பெரும் வெற்றியை அடைந்துள்ளது.

4 மாதங்களில் 1.55 லட்சம் ரைடுகள்

ஜம்மு மாநகரில் வாடகை சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்ட முதல் 4 மாதங்களில் 13,000 பயனாளிகள் இணைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இவர்கள் 4 மாதங்களில் 1.55 லட்சம் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஜம்மு மாநகரில் பல இடங்களில் சைக்கிள் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Read More : பலரின் கனவாக மாறியுள்ள உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்- எமிரேட்ஸ் A380 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!


இங்கு ஒரு நிலையத்திற்கு சென்று நீங்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டு பயணித்து, நீங்கள் பயண இடத்திற்கு அருகாமையில் உள்ள மற்றொரு நிலையத்தில் சைக்கிளை விட்டு விடலாம். சைக்கிளுக்கு புக்கிங் செய்வது, அதற்கு கட்டணம் செலுத்துவது என அனைத்துமே தானியங்கி முறையில் நடைபெறுகிறது.

அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள்

கடந்த மே 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் வாடகை சைக்கிள் திட்டத்தில் 12,936 பயனாளர்கள் பலன் அடைந்துள்ளனர் என்றும், இவர்கள் 1.55 லட்சம் பயணங்களை மேற்கொண்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மொத்தமுள்ள பயனாளர்களில் 2,846 பேர் பெண்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக அனைத்துப் பயனாளர்களும் பயணித்த தூரம் என்பது 33,230 கி.மீ. ஆகும்.

ஆப் மூலமாக புக்கிங்

ஜம்மு நகரவாசிகள் yaana Bikes என்ற ஆப் மூலமாக வாடகை சைக்கிள்களுக்கு புக்கிங் செய்து கொள்ளலாம். ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதள வசதி கொண்ட ஃபோன்களில் இந்த ஆப் கிடைக்கிறது. ஒரு நபர் குறைந்தபட்சம் ரூ.50 செலுத்தி இந்தத் திட்டத்தில் இணையலாம். அவர்களுக்கு நாளொன்றுக்கு தலா 30 நிமிடம் என்ற அளவில் 5 பயண வாய்ப்புகள் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1,500 செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தலா 30 நிமிடங்கள் என்ற அளவில் ஓராண்டுக்கு 1,500 பயண வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Bicycle, Jammu, Smart City

அடுத்த செய்தி