2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தயாராகி வரும் பிரான்ஸ், போக்குவரத்தை சீர்படுத்த பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தனது முதல் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது பிரான்ஸ் அரசு. தற்போதைய சூழலில் பாரீஸ் விமான நிலையம் முதல் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடத்துக்குச் செல்ல ஒரு மணி நேரம் ஆகிறதாம்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையிலும் புதிதாக பறக்கும் டாக்ஸி சேவை பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலக நாடுகள் பலவும் வாகனப் போக்குவரத்தில் எலெக்ட்ரிக் மயமாகத் தயாராகி வரும் வேளையில் பிரான்ஸ் அத்திட்டத்தில் முன்னோடியாக முயற்சிக்கிறது.
முதற்கட்ட திட்டத்தை நிறைவேற்ற 18 மாத கால அவகாசமும் 11.3 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் நிதியாக ஒதுக்கியுள்ளது பிரான்ஸ். இதற்கான பணியை ஏர்பஸ் நிறுவனம் கையிலெடுத்துள்ளது.
மேலும் பார்க்க: வாட்ஸ்அப்: விரைவில் வருகிறது முக்கிய அப்டேட்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flying Taxi, Olympic 2024, Paris