Home /News /automobile /

பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கரம் கோர்த்த பிரபல வெளிநாட்டு நிறுவனம்.. எதற்காக தெரியுமா?

பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கரம் கோர்த்த பிரபல வெளிநாட்டு நிறுவனம்.. எதற்காக தெரியுமா?

காட்சி படம்

காட்சி படம்

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை போலவே, பேட்டரிகளை தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை சேர்ந்த டெஸ்லாவின் முன்னாள் இன்ஜினியர் வடிவமைத்த பேட்டரி ஐரோப்பிய நாட்டின் ஆர்டரை பெற்றுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை மற்றும் உற்பத்தி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சமீபத்தில் WHO வெளியிட்ட அதிக காற்று மாசுள்ள நகரங்களில் பட்டியலில் கூட இந்தியாவைச் சேர்ந்த 15 நகரங்கள் இடம் பெற்றிருந்தன. நகரங்களைக் கடந்து கிராமப்புறங்களையும், சிறு நகரங்களையும் காற்று மாசு பாடாய் படுத்த ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது.

இருசக்கர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மட்டுமல்லாது பேட்டரி மற்றும் பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. பேட்டரி என்பது மின்சார வாகனத்தின் முக்கிய அங்கமாகும், மேலும் அது முழு சார்ஜில் கொடுக்கும் ரன் மற்றும் அதை சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம் ஆகியவையே எலெக்ட்ரிக் வாகனத்தை இயக்க பயன்படுகிறது.



இதனால் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை போலவே, பேட்டரிகளை தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில், பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் டெஸ்லா பொறியாளர் வடிவமைத்த உலகிலேயே அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட பேட்டரிகளில் ஒன்றை ஐரோப்பிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான எரன் குரூப் (Eren Group) அதன் ஸ்டோரேஜ் பயன்பாடுகளுக்காக வாங்கியுள்ளது.

also read : இந்தியாவில் தீப்பிடிக்காத Fireproof பேட்டரிகளை அறிமுகப்படுத்த தயார் - கோமகி நிறுவனம்

இதன் மூலம் இந்தியாவில் EVகள் மற்றும் சோலார் திட்டங்களில் இந்த பேட்டரிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார். சூரிய சக்தி திட்டங்களில் இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சூரியனில் இருந்து ஆற்றல் நாள் முழுவதும் மற்றும் எல்லா நாட்களிலும் கிடைக்காது, இதனால் சேமிப்பு தேவைப்படுகிறது.



புரோவிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் சித்தார்த்தா பக்ரி கூறுகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்க கூடிய வாகனங்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமான எரன் குரூப், பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான புரோவிக்கிடம் இருந்து 54 மெகாவாட் பேட்டரிகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக EVக்கான முன்மாதிரியை உருவாக்கி வருகிறோம், அதிக அடர்த்தியான, வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரியை உருவாக்குகிறோம் . எங்களது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய அரை மணிநேரம் மட்டுமே ஆகும் என்கிறார் சித்தார்த்தா பக்ரி.

also read : கடந்த 3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 950% அதிகரிப்பு..

சுமார் 11 வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பிறகு, இப்போது வாகனப் பயன்பாடுகளுக்காக, ஒரு கிலோவுக்கு 180 Wh வரை ஆற்றல் கொண்ட, உலகளவில் மிகவும் அதிக திறன் கொண்ட அடர்த்தியான பேட்டரிகளை உருவாக்கியுள்ளதாக புரோவிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை பேட்டரி 3.2 மெகா வாட் வரை மின்சாரத்தை சேமிக்க கூடியது, அதனைக் கொண்டு 20 அடி நீளமுள்ள கன்டெய்னருக்கு தேவையான 1.5 மெகாவாட் மின்சக்தியை, இரண்டு மணிநேரத்திற்கு கொடுக்க முடியும். மேலும் புரோவிக் நிறுவனத்தின் புதிய பேட்டரிகள் 20 ஆண்டுகள் வரை உழைக்க கூடியவை.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Electric car

அடுத்த செய்தி