Home /News /automobile /

3,30,000 மஸ்டாங் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் ஃபோர்டு... ஏன் தெரியுமா?

3,30,000 மஸ்டாங் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் ஃபோர்டு... ஏன் தெரியுமா?

மஸ்டாங் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் ஃபோர்டு

மஸ்டாங் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் ஃபோர்டு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரில் ஏற்பட்ட தயாரிப்பு கோளாறை சரி செய்யும் விதமாக, அந்நிறுவனம் தாமாக முன் வந்து ஒரு அழைப்பை விடுத்தது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஃபோர்டு (Ford) நிறுவனம் ஏற்கனவே விற்பனைச் செய்த 3 லட்சத்து 30 ஆயிரம் மஸ்டாங் கார்களை திருப்பி அனுப்புமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்காவை தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஃபோர்டு. உலகின் மிக பெரிய டாப்10 நிறுவனங்களின் பட்டியலில் ஃபோர்டு-ம் ஒன்றாக இருக்கின்றது. இந்நிறுவனம் இதுவரை 6,386,818 யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்திருக்கின்றது. நிறுவனத்தின் தற்போதைய நிகர வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை ஃபோர்டு நிறுவனம் மூடி கிட்டதட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரில் ஏற்பட்ட தயாரிப்பு கோளாறை சரி செய்யும் விதமாக, அந்நிறுவனம் தாமாக முன் வந்து ஒரு அழைப்பை விடுத்தது. அதன்படி, டீசல் துகல் வடிகட்டியில் உள்ள கோளாறை சரி செய்யும் பொருட்டு இந்திய பயனாளர்களிடம் இருந்து கார்களை திரும்ப வாங்கியது.

தற்போது ஃபோர்டு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள 3 லட்சத்து 30,000 க்கும் மேற்பட்ட மஸ்டாங் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதில் உள்ள பின்புற கேமராவில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்வதற்கான ஃபோர்டு நிறுவனம் தாமே முன்வந்து இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திரும்பப்பெறப்படும் கார்கள் 2015 முதல் 2017 வரையிலான மாடல் ஆண்டுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்களின் படி, ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் வகை காரின் பின்புறக் காட்சி கேமரா வயரிங் தளர்வாக அல்லது சேதமடைந்திருந்ததால் விபத்துக்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கேமரா கோளாறு காரணமாக இரண்டு சிறிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அதனால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

Also read... துபாய் செல்லும் பயணிகள் இனி இந்திய விமான நிலையங்களில் Rapid RT-PCR டெஸ்ட் செய்ய தேவையில்லை!

எனவே 2015 முதல் 2017ம் ஆண்டு வரை அமெரிக்காவில் விற்பனையான 3 லட்சத்து 30 ஆயிரம் மஸ்டாங் கார்களையும் திரும்ப அழைத்துள்ள ஃபோர்டு நிறுவனம், டீலர்கள் அதில் உள்ள கேமரா கோளாறை சரி செய்து கொடுப்பார்கள் என அறிவித்துள்ளது. அந்தந்த கார்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏற்ப, கேமராவில் உள்ள கோளாறு சரி செய்யப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மார்ச் 7ம் தேதி முதல் தொடங்க முடிவெடுத்துள்ள ஃபோர்டு நிறுவனம், அன்றிலிருந்து மஸ்டாக் வாடிக்கையாளர்களுக்கு இதற்கான கடிதங்களை அனுப்ப உள்ளது. ரேர்வியூ கேமராவில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு வாடிக்கையாளர்களுக்கு தங்களது கார் தயாரானது குறித்து மற்றொரு கடிதம் அனுப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ford

அடுத்த செய்தி