• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கார்களுக்கு ரூ.5 லட்சம் வரை சலுகைகள் வழங்கும் ஃபோர்ட் நிறுவனம்

கார்களுக்கு ரூ.5 லட்சம் வரை சலுகைகள் வழங்கும் ஃபோர்ட் நிறுவனம்

கார்களுக்கு ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஃபோர்ட் நிறுவனம்

கார்களுக்கு ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஃபோர்ட் நிறுவனம்

ஃபோர்ட் இந்தியாவின் நிர்வாகியான வினய் ரெய்னா, "மிட்நைட் சர்ப்ரைஸ் சலுகையை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்கள் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு ஃபோர்டு தயாரிப்புடன் கூடுதலாக பிற பரிசுகளைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறோம்" என்று கூறியுள்ளார்.

  • Share this:
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோ-மொபைல் சந்தையில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க, ஃபோர்டு நிறுவனம் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கு வந்த பிறகு ஃபோர்டு நிறுவனம் விரிவாக்கத்திற்காக ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இப்போது இந்த நிறுவனம் ஒரு அட்டகாசமான ஆஃபர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது.

அதனால் கார்களை வாங்க நினைக்கும் பலருக்கு இது உகந்த நேரம். ஃபோர்டு (Ford) கார் நிறுவனம் சார்பில் 'மிட்நைட் சர்ப்ரைஸ்' (‘Midnight Surprise’) விற்பனை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. சிறப்பு விற்பனையின் அங்கமாக கார்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்படும் என கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோருக்காக டிசம்பர் 4, 2020 முதல் டிசம்பர் 6, 2020 வரை இந்த சலுகைகள் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அதன்படி ஃபோர்டு நிறுவனம் சூப்பரான டீல்களுடன், 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வழங்க உள்ளது. இந்த மிட்நைட் சர்ப்ரைஸின் சலுகைகள், ஃபோர்டின் பின்வரும் ஃபோர்டு ஃபிகோ, ஃபோர்டு ஆஸ்பியர், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு எண்டெவர் (Ford Figo, Ford Aspire, Ford Freestyle, Ford EcoSport and Ford Endeavour) உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு கிடைக்கும்.

Also read: Vodafone REDX | வோடபோன் ஐடியாவின் அட்டகாசமான REDX பேமலி போஸ்ட்பெய்ட் ப்ளான்..

இந்த மூன்று நாள் சலுகை காலத்தின்போது, நீங்கள் முன்பதிவு செய்யும் ஃபோர்டு கார்களுக்கு டிஜிட்டல் ஸ்க்ராட்ச் கார்டு கிடைக்கும், இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். மேலும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட பரிசுகளும் கிடைக்கும். மிட்நைட் சர்ப்ரைஸ் சலுகையின்போது நீங்கள் செய்யும் முன்பதிவுகளில் சில பரிசுகளில் வீட்டு உபகரணங்களான LED TV, டிஷ்-வாஷர், ஏர் பியூரிஃபையர், மைக்ரோவேவ் ஓவன்களுடன், அட்டகாசமான லேட்டஸ்ட் ஜெனரேஷன் ஐபாட், ஐபோன் 11, பிராண்டட் சைக்கிள், ஃபிட்னஸ் ஸ்மார்ட்வாட்ச்கள், ரூ. 25,000 முதல் 3 & 5 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 1 லட்சம் தங்க வவுச்சர் போன்றவை உங்களுக்கு கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தவிர, டிசம்பரில் காரை டெலிவரி எடுக்கும் வாடிக்கையாளர்களு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பம்பர் பரிசும் காத்திருக்கிறதாம்! இந்த சலுகை அறிவிப்பையொட்டி ஃபோர்டு கார் விற்பனை மையங்கள் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிக்கலை அளிக்காமல் நிறுவனம் ஒரு புதிய வழியை நடைமுறைப்படுத்தி உள்ளது.

அதாவது நீங்கள் டயல்-ஏ-ஃபோர்டு (Dial-A-Ford) மூலம் கட்டணமில்லா எண்ணான 1800-419-3000-ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது ஃபோர்டின் அதிகாரபூர்வ போர்டலான www.booking.india.ford.com -ல் நீங்கள் பாதுகாப்பாக முன்பதிவு செய்யலாம். இந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் ஃபோர்டு டீலர்ஷிப்கள் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும்,

இதனால் வாடிக்கையாளர்களுக்கு டிரைவ் டெஸ்ட் மற்றும் ஃபோர்டு முன்பதிவு செய்வது மிகவும் வசதியாக இருக்கும். இதுகுறித்து விளக்கிய ஃபோர்டு இந்தியாவின் சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவையின் நிர்வாக இயக்குனர் வினய் ரெய்னா, "மிட்நைட் சர்ப்ரைஸ் சலுகையை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்கள் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு ஃபோர்டு தயாரிப்புடன் கூடுதலாக பிற பரிசுகளைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறோம்" என்று கூறினார்.



கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மில்லியன் டாலர் செலவில் ஆண்டிற்கு 2,00,000 கார்கள் தயாரிக்க சென்னையில் வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைத்தது. வளர்ச்சித் திட்டங்களைப் பொருத்தவரை ஃபோர்டு இந்தியா தென் ஆப்பிரிக்கா உள்பட 50 சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மெக்சிகோ மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கும் கார்களை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலும் இது போன்று பல சலுகைகளை அளித்து வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாக ஃபோர்டு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: