ஏலத்துக்கு வரும் ’ராம்போ’ சில்வஸ்டர் ஸ்டலோனின் ஃபோர்டு முஸ்தாங் கார்..!

கூடுதலாக சில்வஸ்டர் கையெழுத்திட்ட சான்றிதழும் காரை வாங்குபவருக்கு வழங்கப்பட உள்ளது.

Web Desk | news18
Updated: July 26, 2019, 12:42 PM IST
ஏலத்துக்கு வரும் ’ராம்போ’ சில்வஸ்டர் ஸ்டலோனின் ஃபோர்டு முஸ்தாங் கார்..!
1965 மாடல் முஸ்தாங். (Image: Catawiki/ AFP Relaxnews)
Web Desk | news18
Updated: July 26, 2019, 12:42 PM IST
ஹாலிவுட் பிரபலம் சில்வஸ்டர் ஸ்டலோனின் ஃபோர்டு முஸ்தாங் கார் ஆன்லைனில் ஏலத்துக்கு வருகிறது.

கேட்டவிக்கி என்ற ஆன்லைன் ஏலங்கள் நடத்தும் இணையதளம், தற்போது ‘ராம்போ’ நாயகன் சில்வஸ்டர் ஸ்டலோனின் 1965 மாடல் ஃபோர்டு முஸ்தாங் காரை ஏலத்துக்கு விடுகிறது. ஜூலை 28-ம் தேதி வரையில் ஆன்லைன் ஏலம் நடத்தும் தளத்தில் விலை கேட்கலாம்.

1980 காலகட்டத்தில் சில்வஸ்டர் இந்தக் காரைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்தக் கார்தான் தற்போது ஒரிஜினல் நம்பர் ப்ளேட் உடன் விற்பனைக்கு உள்ளது. கூடுதலாக சில்வஸ்டர் கையெழுத்திட்ட சான்றிதழும் காரை வாங்குபவருக்கு வழங்கப்பட உள்ளது.


ஏலம் நடத்தும் கேட்ட விக்கி இணையதளத்தில் இந்தக் கார் 80 லட்சம் ரூபாய் வரையில் விலை போகலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரை 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஏலம் ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்தவர் தனது ‘கார் கலெக்‌ஷன்’ பட்டியலில் வைத்திருந்தார். மீண்டும் இந்தக் கார் ஒரிஜினல் என்ஜின் உடனே ஏலத்துக்கு வந்துள்ளது.

மேலும் பார்க்க: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் விஸ்தாரா... 
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...