அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் புதிய எலக்டிரிக் டிரக் ஒன்றை வடிவமைப்பதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின. அந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அறிவிப்பு ஒன்றை ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. எலக்டிரிக் டிரக் ஒன்றை வடிவமைத்துள்ள ஃபோர்டு நிறுவனம், அதன் வடிவமைப்பை மே 19 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மே 19 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் யூ டியூப்பில் ஃபோர்டு அறிவிக்க உள்ளது.
F 150 மாடல்
டிரக்குகள் ஃபோர்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் டிரக்குகளில் ஒன்றாக உள்ளது. புதிய டிரக்கின் அமைப்பு குறித்து ஒரு சில தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அதாவது, எப் 150 லைட்டனிங் என்ற புதிய பெயர் மற்றும் 1990 -களில் பிரபலமாக இருந்த SVT F-150 மாடலுக்கு இணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
F-150 -ல் இருக்கும் ஹெட்லேம்ப்போல் புதிய லைட்டனிங் டிரக்குகளிலும் ஹெட்லேம்ப் உள்ளதாக கூறப்படுகிறது. புதிய அலாய் சக்கரங்கள், ஏரோடைனமிக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் எப் 150
டிரக்குகளில் இருப்பதுபோல் உள்ளதாகவும், ஹேண்ட்ஸ் ப்ரீ டிரைவர் அசிஸ்டென்ஸ், ஓ.டி.ஏ சாப்ட்வேர் அப்டேட்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ : கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்களுக்கான வாரண்ட்டி, இலவச சேவையை நீட்டித்த டாட்டா மோட்டார்ஸ்
ஹம்மர் எலக்டிரிக் எஸ்.யூ.வி வாகனத்தைப்போல் எப்.150 லைட்டனிங் பவர் ஹவுஸாக இருக்கும் என ஃபோர்டு சி.இ.ஓ ஜிம் பார்லே தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, எப்,150 லட்டனிங் பவர் ஹவுஸாக இருக்கும் என்பதால், மற்ற
வாகனங்களைவிட விரைவாக சார்ஜ் ஆகும் என கூறியுள்ளார்.
அதாவது, சூப்பர் ஜார்ஜ் வி.8, எப் 150 லைட்டனிங்ஸ் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏர் அப்டேட்ஸ் அம்சங்களும் சிறப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். ஆல் - வீல் - டிரைவுக்கு ஏற்ப டூயல் மோட்டர் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒருமுறை சார்ஜ் செய்த பேட்டரி பவர் மூலம் 300 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்க முடியும் கூறினார்.
ALSO READ : பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளியான புதிய ஸ்கோடா ஃபேபியா பிரீமியம் ஹேட்ச்பேக்!
கேஸ் டிரக்குகளைப் போல் அளவு மற்றும் வடிவமைப்புகள் எப்.150 லைட்டனிங் டிரக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. டிரக்கின் முன்புறத்தில் ஒளிரும் லைட் பார், 'பா' வடிவ கிரில் மற்றும் "Lightning" லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரக்கின் உட்புறத்தில் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் 12. இன்ச் ஸ்கீரின் உள்ளது.
பல்வேறு அம்சங்களைக் கொண்ட புதிய ஃபோர்டு எப்.150 லைட்டனிங் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் (june 2022) வெளியாகும் என்றும், ஹம்மர் EV, Chevy Silverado, Chevy Silverado ஆகிய பிராண்டுகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.