பயன்படுத்திய போர்டு கார் வாங்குவது நல்லதா?

ford cars

செவர்லெ நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்த போதும் இதே போன்ற நிலையே செவர்லே கார்களுக்கு ஏற்பட்டது. பீட், குரூஸ் போன்ற மாடல்கள் பெருமளவில் விலை குறைந்தன.

  • Last Updated :
  • Share this:
போர்டு கார் தொழிற்சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயன்படுத்திய போர்டு கார்களை வாங்குவது நல்லதா? எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுமா?

1994ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான FORD தனது 27 ஆண்டு கால பயணத்தை 2022ம் ஆண்டு செப்டம்பருடன் நிறுத்திக் கொள்ளும் என தெரிகிறது. குஜராத் மாநிலம் சனந்த் மற்றும் தமிழகத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் FORD நிறுவனத்திற்கு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், ஆண்டுக்கு 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இது மொத்த திறனில், 20 சதவீதம் மட்டுமே. இது போன்ற காரணங்களால், கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை FORD சந்தித்துள்ளதாக, அந்நிறுவனத் தலைமை செயல் அதிகாரி Jim Farley தெரிவித்துள்ளார் எதிர்பார்க்கப்பட்டதை விட FORD கார்களின் விற்பனையும் மிக குறைவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கார்களின் உற்பத்தி மட்டுமே நிறுத்தப்படுவதாகவும், ஃபோர்டு வாகனம் வைத்திருப்பவர்களின் சர்வீஸ் தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே போர்டு நிறுவனத்தின் பயன்படுத்திய பழைய கார்களை வாங்கலாமா வேண்டாமா என பல்வேறு சந்தேகங்கள் கார் பிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Also Read:  தாலிபான்கள் கையகப்படுத்திய பிறகு காபுலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம் – எந்த நாட்டுடையது?

பழைய கார் சந்தையை பொறுத்தவரையில் போர்டின் பிகோ, எண்டேவர், எக்கோ ஸ்போர்ட் போன்ற மாடல்கள் வாடிக்கையாளர்களிடையே பிரபலமானவையாக திகழ்கின்றன. தற்போது போர்டு நிறுவனம் மூடல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போர்டு கார்களின் பழைய மாடல் கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களின் விலை போன்றவற்றை மனதில் கொண்டு வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read:  யோகி ஆதித்யநாத் அரசுக்கு ஆஸ்திரேலிய எம்.பி பாராட்டு!

பழைய கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள டீலர் ஒருவர் கூறுகையில், போர்டு கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் என கூறினார். உடனடியாக போர்டு கார்களின் விலை 10 முதல் 15% வரை குறையலாம் அல்லது இந்த மாடல் கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகம் முன்வராமல் இருக்கலாம் என்பதால் போர்டு கார்களுக்கு அதிக கிராக்கி இருக்காது. அதே நேரத்தில் உதிரி பாகங்கள் சப்ளையில் எந்தவித சுணக்கமும் இருக்காது என்று போர்டு தெரிவித்திருப்பதால் பெரிய அளவில் தயக்கம் கொள்ளத்தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.

செவர்லெ நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்த போதும் இதே போன்ற நிலையே செவர்லே கார்களுக்கு ஏற்பட்டது. பீட், குரூஸ் போன்ற மாடல்கள் பெருமளவில் விலை குறைந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: