புதிய எகோஸ்போர்ட் மாடல் காரை அறிமுகம் செய்தது ஃபோர்டு

புதிய எகோஸ்போர்ட் மாடல் காரை அறிமுகம் செய்தது ஃபோர்டு
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஃபோர்டு எகோஸ்போர்ட் எஸ் வகை கார்.
  • Share this:
புதிய எகோஸ்போர்ட் எஸ் மாடல் காரை ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிமுக விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

ஃபோர்டு நிறுவனம் வெளியிட்ட கார்களில் மிகவும் வெற்றியடைந்த மாடல் கார்களில் ஒன்று எகோஸ்போர்ட். எகோஸ்போர்ட் மாடல் கார் கடந்த 2013-ம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.  சென்னை ஃபோர்டு ஆலையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த இந்த மினி எஸ்யுவி காரை அனைவருக்கும் பிடித்துப் போனது. நான்கு பேர் பயணிக்க கூடிய வகையில் எகோஸ்போர்ட் கார் தயாரிக்கப்பட்டிருந்தது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே எகோஸ்போர்ட் விற்பனையும் அதிகரித்தது. கடந்த மார்ச் மாதத்தில் 9,016 ஃபோர்டு நிறுவனத்தின் கார்கள் விற்பனையாகிருந்தன. மொத்தம்  விற்பனையான ஃபோர்டு நிறுவன கார்களில் 5,344 கார்கள் எகோஸ்போர்ட்  மாடல் கார் வகையைச் சார்ந்தவை. அந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது ஃபோர்டு எகோஸ்போர்ட்.

தற்போது இந்த வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் புதிய வாடிக்கையாளர்களை எகோஸ்போர்ட் பக்கம் இழுக்கவும் புதிய `எகோஸ்போர்ட் எஸ்’ மாடல் காரை ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எகோஸ்போர்ட் சிக்னேச்சர் மாடல் காரையும் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. காரின் உள்புறத்திலும் வெளிப்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


மேலும்  ஃபோர்டு 1.0எல் எகோபூஸ்ட்  பெட்ரோல் இன்ஜினும் 1.5எல் டிடிசிஐ டீசல் இன்ஜினும் கொண்டு இந்த கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எகோஸ்போர்ட் எஸ் மாடல் காரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 8 இன்ச் தொடுதிரை வசதியுடன் கூடிய டிஸ்பிளே, சன் ரூப் ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது. மேலும் பயணிகள் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகளை கொண்டிருக்கிறது. இந்தக் காரின் டெல்லி விற்பனையக விலை ரூ.11,37,309 (பெட்ரோல் இன்ஜின்).

பல்வேறு புதிய வசதிகளையும் மேம்படுத்தப்பட்ட இன்ஜினையும் கொண்டு வெளிவந்துள்ள இந்த புதிய எகோஸ்போர்ட் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: May 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading