ஃபோர்டு கார் டிசைனை காப்பியடித்த சீனா நிறுவனம் - டிராகன் பேஸ் 3.0 அட்ராசிட்டி!

டிராகன் பேஸ் 3.0

ஃபோர்டு காம்பாக்ட் காருக்கும், யுவான் புரோவுக்கு பெரியளவிலான டிசைன் வேறுபாடுகள் இல்லை

  • Share this:
ஃபோர்டு நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பான ஃபோர்டு eco Sport கார் டிசைனை அச்சுப்பிசகாமல் சீன நிறுவனம் ஒன்று காப்பியடித்து டிராகன் பேஸ் 3.0 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான கார் மாடல்களை காப்பியடித்து, அந்த டிசைனிலேயே வேறொரு பெயரில் புதிய கார்களை சீன நிறுவனங்கள் தொடர்ந்து தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. ரோல்ஸ் ராய் முதல் அதிகப்பட்ச விலையுடைய அனைத்து கார்களின் மாடல்களுமே சீன நிறுவனங்களால் காப்பியடிக்கப்பட்டுள்ளன. அந்தவரிசையில் தற்போது ஃபோர் eco Sport -ம் இணைந்துள்ளது. எஸ்.யூ.வி காம்பாக்ட் மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டிசைனைக் கொண்ட மாடல் இதுவாகும். இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், சீன நிறுவனம் COPY CAT வேலையை பார்த்துள்ளது.

ஒரு காரின் மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய கார் மாடலை உருவாக்க முயற்சி செய்பவர்கள் மத்தியில், ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு காரின் மாடலை கொஞ்சமும் கூச்சமில்லாமல் சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனம் அப்படியே காப்பியடித்துள்ளது. பிஒய்டி யுவான் புரோ ஈவி (BYD Yuan Pro EV) என பெயரிடப்பட்டுள்ள அந்த எலக்டிரிக் காரின் டிசைனை ’டிராகன் பேஸ் 3.0’ என அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் Eco sport காரையும், பிஒய்டி யுவான் புரோ ஈவி காரையும் ஒரே இடத்தில் நிறுத்தினால், வித்தியாசங்களை கண்டுபிடிக்கவே முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யுவான் புரோவின் டிசைன் :

ஏற்கனவே கூறியதுபோல் ஃபோர்டு காம்பாக்ட் காருக்கும், யுவான் புரோவுக்கு பெரியளவிலான டிசைன் வேறுபாடுகள் இல்லை. சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஸ்பேர் வீல் பின்பக்க பூட் டோரில் இருப்பதுகூட EcoSport டிசைன் அடிப்படையிலேயே இருக்கிறது. இதைத்தவிர, மல்டிபங்ஷன் ஸ்டீரிங்வீல் ஆப்சன் மற்றும் 8 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை பொறுத்தவரை ஏர்பேக்குகள் மற்றும் ஏ.பி.எஸ், ஏ.பி.டியும் உள்ளது. எலக்டிரானிக் ஸ்டெபிளிட்டி மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோலும் கொடுக்கப்பட்டுள்ளது.

பவர் ஆப்சன்ஸ் :

எலக்டிரிக் கார்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு பிஒய்டி நிறுவனம் காம்பாக்ட் எஸ்.யூ.வி மாடலான யுவான் புரோவில் 2 வகையான பேட்டரி ஆப்சனைக் கொடுத்துள்ளது. 38.9kWh என்ற சிறிய பேட்டரியை ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் சுமார் 301 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்க முடியும். 50.1 kWh என்ற பெரிய பேட்டரியில் 401 கிலோ மீட்டர் தொலைவை ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் பயணிக்க முடியும். காரில் கொடுக்கப்பட்டுள்ள எலக்டிரிக் மோட்டார் 136hp திறனையும், 210 என்.எம்.ஐயும் கொண்டுள்ளது.

விலை :

இந்தக் கார் குறைந்த பட்ஜெட் கொண்ட வாடிக்கையாளர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் தொடக்க விலை 9.17 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்ச விலையாக 11.47 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தக் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: