Home /News /automobile /

ஹார்லி டேவிட்சன், ஜென்ரல் மோட்டார்ஸைத் தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு - காரணங்கள் என்ன?

ஹார்லி டேவிட்சன், ஜென்ரல் மோட்டார்ஸைத் தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு - காரணங்கள் என்ன?

ஃபோர்டு ஆலை

ஃபோர்டு ஆலை

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனங்களை தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனமும் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    1994ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான FORD தனது 27 ஆண்டு கால பயணத்தை 2022ம் ஆண்டு செப்டம்பருடன் நிறுத்தி கொள்ளும் என தெரிகிறது. குஜராத் மாநிலம் சனந்த் மற்றும் தமிழகத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் FORD நிறுவனத்தின் ஆலைகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், ஆண்டுக்கு 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இது மொத்த திறனில், 20 சதவீதம் மட்டுமே. இது போன்ற காரணங்களால், கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை FORD சந்தித்துள்ளதாக, அந்நிறுவனத் தலைமை செயல் அதிகாரி Jim Farley தெரிவித்துள்ளார்.

    எதிர்பார்க்கப்பட்டதை விட FORD கார்களின் விற்பனையும் மிக குறைவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச தரத்திற்கு தகுந்தாற்போல் கார்களை உற்பத்தி செய்ய FORD அதிகமான முதலீடுகளை செய்துள்ள நிலையில், தற்போதைய விற்பனை மிகவும் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.

    எனவே இந்தியாவில் வாகன உற்பத்தியை உடனடியாக நிறுத்த உள்ளதாகவும், குஜராத்தில் உள்ள சனந்த் ஆலை 2022ஆம் ஆண்டு ஏப்ரல் வரை செயல்படும் என்றும், சென்னையை அடுத்த மறைமலை நகர் ஆலை 2022ம் ஆண்டு செப்டம்பர் வரை மட்டுமே செயல்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வேலை இழப்பு எதுவும் இருக்காது என்றும், ஃபோர்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    கார்களின் உற்பத்தி மட்டுமே நிறுத்தப்படுவதாகவும், ஃபோர்டு வாகனம் வைத்திருப்பவர்களின் சர்வீஸ் தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஃபோர்டு நிறுவனம் செய்வதுபோல, COMPLETELY BUILT UNIT என்ற அடிப்படையில், கார்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து, இந்தியாவில் விற்பனை செய்வது தொடரும் என ஃபோர்டு நிறுவனம் கூறியுள்ளது.

    எனவே, எதிர்வரும் நாட்களில், ஃபோர்டு தன்னுடைய புதிய ரக Mustang, Bronco, Ranger pickup truck போன்ற புதிய வாகனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதால்தான் அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது. இந்தியாவில் கார் விற்பனை குறைவாக உள்ளதாக கூறி, 2017ம் ஆண்டு அமெரிக்காவின் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறும் 3வது அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமாக ஃபோர்டு இருக்கும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Ford

    அடுத்த செய்தி