ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

மீண்டும் சிக்கலில் ஃபோர்டு நிறுவனம்… 3 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..!

மீண்டும் சிக்கலில் ஃபோர்டு நிறுவனம்… 3 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் ஃபோர்டு நிறுவனம், தொடர்ந்து தங்கள் நிறுவனத்தின் கிளைகளை மூடி வருவதால் ஐரோப்பிய பொருளாதாரம் கனிசமான பின்னடைவை சந்திக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமெரிக்காவை மையமாக கொண்ட உலகின் மிகப் பழமையான கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு மோட்டார்ஸ். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தங்கள் கிளைகளை பரப்பி உலக கார் சந்தையில் தவிர்க்க முடியாத பிராண்டாக இருக்கிறது. ஆனால் அண்மைக் காலமாக நிதிச் சுமையில் சிக்கித் தவிப்பதாக கூறி, அந்த நிறுவனம் தங்களின் பல கிளைகளை மூடி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் பேர். ஆனால் இப்போதைய நிலவரப்படி பல ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது ஜெர்மனியில் இருக்கும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 3,200 தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமெரிக்க அரசு கார் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது.

குறிப்பாக தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் எலக்டரிக் கார்கள் மற்றும் பேட்டரிகளுக்கு அதிகப்படியான சலுகைகளை அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. எனவே ஐரோப்பிய யூனியனில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கு மாற்ற ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன் முதற்கட்டமாக ஜெர்மனியில் இருக்கும் தங்கள் நிறுவனங்களில் இருந்து 3,200 தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப உள்ளது ஃபோர்டு நிறுவனம்.

Read More : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Grand Vitara SUV..! ஏற்றுமதியை தொடங்கிய மாருதி சுசுகி நிறுவனம்..

ஃபோார்டு நிறுவனத்தின் இந்த முடிவு ஐரோப்பிய பொருளாதாரத்தில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் இதனால் கேள்விக்குறியதாகும். ஜெர்மனியில் இருந்து ஐரோப்பாவிற்கான ஃபோர்டு நிறுவனத்தின் பல வெற்றிகரமான மாடல் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை  செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஃபோர்டு நிறுவனம் எடுத்திருக்கும் இந்த திடீர் முடிவு ஜெர்மனியின் தொழில் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் வல்லுநர்கள். எனவே ஃபோர்டு நிறுவனம் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஐரோப்பிய யூனியனிலேயே தங்களுடைய புதிய எலக்ட்ரிக் மாடல் கார்களை தயாரிக்க அவர்கள் முன்வரலாம் என்றும் ஃபோர்டு நிறுவனத்திற்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, ஜெர்மனியில் தங்களின் முதலீட்டை மேலும் அதிகரித்து ஐரோப்பிய யூனியனுக்கான எலக்டரிக் கார்களை முனைப்புடன் தாயரிக்க இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் இப்போது மொத்தத்திற்கும் மூடு விழா நடத்த இருக்கிறது.  இதுதான் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் தொழில் முனைவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Automobile, Business, Ford