இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான சுசூகி நிறுவனம், ஜப்பானில் பறக்கும் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஸ்கைட்ரைவ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள கூட்டறிக்கையில், இந்தியாவில் புதிய சந்தைகளை உருவாக்க இரண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என்றும், புதிய ஒப்பந்தத்தின் மூலமாக ஜப்பானைச் சேர்ந்த வாகன உற்பத்தியாளருடன் ஆட்டோமொபைல்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவுட்போர்டு மோட்டார்கள் ஆகியவற்றுடன் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பிசினஸில் களமிறங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு பறக்கும் கார்களை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஜப்பானின் ஸ்கைட்ரைவ் நிறுவனம், தற்போது இரண்டு பேருடன் பயணிக்க கூடிய பறக்கும் கார் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ‘ஸ்கைட்ரைவ் ’ என்ற பூஜ்ஜியம் மாசை வெளியிடக்கூடிய, பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை அமெரிக்காவின் லாஸ்வேகாசில் நடந்த வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு சுசூகி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுமா என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
சுசூகி நிறுவனம் சமீபத்தில் தனது இந்திய தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் தயாரிப்பதற்காக 1.37 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவைகள் வருங்காலங்களில் உயரக்கூடும் என்பதால், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தளமாக சுசூகி மோட்டார்ஸ் நிறுவனம் உருவாகக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும், 2070க்குள் காற்று மாசில் பூஜ்ஜிய அளவை அடைய வேண்டும் என்பதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளதால், உள்ளூர் மின்சார வாகனங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் விரைவான வளர்ச்சி ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே மின்சார வாகன உற்பத்தியின் இலக்கை உயர்த்த பல வழிகளிலும் சுசூகி நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்கு முந்தைய அறிக்கையில் கூட விமான டாக்சிகளின் சந்தை 2040ல் $1,700 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயரக்கூடும் என சுசூகி நிறுவனம் கணித்திருந்தது.
நிறுவனத்தின் மின்சார வாகன இலக்குகளை மேம்படுத்தவும் பன்முகப்படுத்தவும் முயற்சித்து வருகிறது என்று முந்தைய அறிக்கை கூறியது. வர்த்தக ரீதியான தயாரிப்புக்கு முதலீடுகளை எதிர்பார்த்திருந்த நேரத்தில், சுசூகி நிறுவனம் அதனுடன் கைகோர்த்துள்ளது.
Also read... புதிய Toyota Glanza vs புதிய Maruti Suzuki Baleno... வேறுபாடுகள் என்ன?
பறக்கும் கார் தயாரிப்பு ஒப்பந்தத்தால் இந்தியாவில் இருசக்கர, நான்கு சக்கர வாகனத் தயாரிப்புடன் வானத்தையும் எட்டிப்பிடிக்க சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் நனவாகும் பட்சத்தில் கடந்த ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டதைப் போலவே சுசூகி நிறுவனம் இந்திய மோட்டார் வாகனச் சந்தையில் முதலிடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.