ஓலா மீது 650 கோடி ரூபாய் முதலீடு செய்த ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியதை அடுத்து கடந்த ஆண்டு நிறுவனத்தைவிட்டு சச்சின் பன்சால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: February 20, 2019, 2:21 PM IST
ஓலா மீது 650 கோடி ரூபாய் முதலீடு செய்த ஃப்ளிப்கார்ட்!
ஓலா- ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: February 20, 2019, 2:21 PM IST
ஃப்ளிப்கார்ட் நிறுவனம், ஓலா மீது 650 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தை தலைமைக்காகவும் உபேர் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை சமாளிக்கவும் ஓலாவுக்கு உதவ முன்வந்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் துணை நிறுவனர் சச்சின் பன்சால். புதிய முதலீட்டு ஒப்பந்தம் குறித்து சச்சின் பன்சால் கூறுகையில், “நுகர்வோர் தொழில் துறையில் நாட்டின் முக்கியத் தொழில் நிறுவனமாக ஓலா உள்ளது. தங்களது சீரிய பணியால் இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக ஓலா உள்ளது. பல இந்தியர்களின் வாகனப் போக்குவரத்துக்கான தேர்வாக இருக்கும் ஓலா, மக்களின் நம்பிக்கையையும் அதிகமாகப் பெற்றுள்ளது” எனக் கூறியுள்ளார்.

புதிய ஒப்பந்தம் குறித்து ஓலா நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால் கூறுகையில், “ஓலா உடன் சச்சின் பன்சாலையும் இணைத்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம். தொழில்துறையில் முக்கியப் புள்ளியாக விளங்குபவர் சச்சின் பன்சால். சச்சினின் முதலீடு ஓலாவுக்குக் கூடுதல் பலம் அளித்துள்ளது. மேலும், ஓலாவின் மக்கள் சேவைக்குப் பக்கபலமாகவும் உள்ளது” எனத் தெரிவித்தார்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியதை அடுத்து கடந்த ஆண்டு நிறுவனத்தைவிட்டு வெளியேறினார் சச்சின் பன்சால் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: கமல் VS ரஜினி... வியூகத்தில் வல்லவர் யார்?
First published: February 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...