ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள விமான கட்டணம்... பயணிகள் அதிர்ச்சி

விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள விமான கட்டணம்... பயணிகள் அதிர்ச்சி

விமானம்

விமானம்

Domestic Airfare Hike | தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில் மும்பையிலிருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான விமான டிக்கெட் கிட்டத்தட்டதாக இருமடங்காக உயர்ந்துள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

ஒவ்வொரு மக்களும் தங்களுடைய பொருளாதாரத் தேவைகளை நிவர்த்திச் செய்துக் கொள்வதற்காக சொந்த ஊரிலிருந்து பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு வேலைக்காக செல்கின்றனர். குடும்பத்தை மற்றும் உறவினர்களைப் பிரிந்து வாழும் பலர் எப்பொழுது திருவிழா வரும் ஊருக்கு செல்லலாம் என்று காத்திருப்பார்கள். அதிலும் தீபாவளி என்றால் சென்னை, பெங்களுரு, மும்பை, டெல்லி போன்ற பிற மாநிலங்களில் பணிபுரியும் மக்கள் எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்குவார்கள்.

இவர்களுக்காகவே தீபாவளி போன்ற பண்டிகை நாள்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஆன்லைன் புக்கிங் தொடங்கிவிடும். அரசு போக்குவரத்து, ரயில் சேவையில் டிக்கெட் கிடைக்காதவர்கள் அடுத்தப்படியாக ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை என்றால் ஆம்னி பேருந்துகளும் யானை விலைக்கு டிக்கெட்டுகளை உயர்த்துவார்கள். இதைப்பார்க்கும் மக்கள் ஆம்னி பேருந்தில் பயணிப்பதற்குப் பதிலாக, இந்த விலையில் விமானத்தில் பயணிக்கலாம் என்று நினைப்பார்கள்.

இந்த நினைப்பிற்கும் தற்போது இடையூறு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆம் டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான விமான டிக்கெட் கிட்டத்தட்ட இருமடங்கு உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மும்பையிலிருந்து பல்வேறு மெட்ரோ அல்லாத நகரங்களுக்கான விமானக் கட்டணம், இடைநில்லா விமானங்களில் சென்று வருவதற்கும், திரும்புவதற்கும் ரூ.20,000க்கு மேல் உள்ளது. இருப்பினும், பெரும்பாலான இடங்களுக்குக் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், டெல்லிவாசிகளுக்கு ரூ. 20,000க்குக் கீழே குறைந்துள்ளது. இருந்தப் போதும் விமான டிக்கெட்டுகள் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக வந்துள்ள செய்தி பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மும்பையிலிருந்து பல உள்நாட்டு இடங்களுக்கான விமானக் கட்டணங்களின் உயர்வுக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Also Read : எருமை மாடுகள் மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் அதிவிரைவு ரயில்!

மும்பையிலிருந்து பிற உள்நாட்டு இடங்களுக்கு செல்லும் விமானக் கட்டணங்களின் விலைப்பட்டியல்:

மும்பை-ஸ்ரீநகர்: ரூ.29,000

மும்பை-ஜோத்பூர்: ரூ.28,600

மும்பை-ராய்ப்பூர்: ரூ.27,800

மும்பை-கொச்சி: ரூ.27,600

மும்பை-அலகாபாத்: ரூ.27,300

மும்பை-ராஞ்சி: ரூ.27,000

மும்பை-லக்னோ: ரூ.26,300

மும்பை-ஜெய்ப்பூர்: ரூ.25,400

மும்பை-கொல்கத்தா: ரூ.24,300

மும்பை-டேராடூன்: ரூ.23,800

Also Read : ”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!

இவ்வாறு பண்டிகைக் காலத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் 50 – 60 சதவீதம் உயர்ந்துள்ளது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதைப் பார்க்கும் போது தீபாவளி போன்ற பண்டிகை நாள்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமா? என்ற நினைப்பை பயணிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக் காலக்கட்டத்தில் விமான டிக்கெட்களுக்கானக் கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. தற்போது விமானக் கட்டணங்களை அந்தெந்த நிறுவனங்களே மேற்கொள்வதால் இந்த அளவிற்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இந்த மாற்றம் விமான பயணிக்கு பெரும் பொருளாதார நெருக்கடியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Flight, India, Price hiked