• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க 5 எளிய டிப்ஸ்!

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க 5 எளிய டிப்ஸ்!

ஸ்மார்ட் ஃபோன்

ஸ்மார்ட் ஃபோன்

உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க முதலில் லாக் போட்டு வைத்திருப்பது அவசியமாகும்.

  • Share this:
    தொழில்நுட்பத்தின் வருகையால், நம்மில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறோம். தற்போது ஆன்லைன் வகுப்புகள் வரத்தொடங்கியதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் வகுப்பு, போன் பேசுவது, படம் பார்ப்பது, புகைப்படம், வீடியோ எடுப்பது, மணி பார்ப்பது , கால்குலேட்டர் என அனைத்து வசதிகளுக்கும் இதிலே உள்ளது. குறிப்பாக தற்போது வங்கி தொடர்பான அனைத்து பணிகளும் ஸ்மார்போனில் நடைபெறுகிறது. இதனால் யூசர்களுக்கு தனியுரிமை குறித்த அச்சம் எழுகிறது. எண்ணற்ற ஹேக்கர்ஸ்கள் ஸ்மார்ட்போனை ஹேக் செய்து அதிலிருக்கும் தகவல்களை திருட முயல்கின்றனர். இதனால் எண்ணற்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது.

    உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க விரும்பினால் உங்கள் சாதனத்தின் பாதுகாப்பை மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.,

    1. உங்கள் ஸ்மார்ட்போனிற்கு லாக் போடவும் :

    உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க முதலில் லாக் போட்டு வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக, உங்கள் மொபைலை நீங்கள் தொலைத்துவிட்டால் அல்லது யாராவது அதை திருடிவிட்டால், நீங்கள் லாக் போட்டிருந்தால் உங்கள் போனை திறக்க அவர்களுக்கு கணிசமான அளவு நேரம் எடுக்கும். இது உங்கள் கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்கள் திருடு போவதை தடுக்க உதவும், மேலும் உங்கள் சாதனத்தைக் கண்காணிக்கவும் துணை புரிகிறது. உங்கள் ஸ்மார்போனில் பின் நம்பர் கொடுக்கும் வகையிலான லாக் போடுவது சிறந்த வழியாகும்.

    2. நம்பகமான தளத்தில் மட்டும் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யுங்கள் :

    உங்களிடம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால் நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் மற்றும் கேம்களை டவுன்லோடு செய்வது அவசியம். கூகுள் ப்ளே ஸ்டோர் என்பது ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கான ஆப் ஸ்டோர் ஆகும், இதிலிருந்து டவுன்லோடு செய்யலாம், ஆனால் நம்பத்தகாத மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் ஹேக்கர்கள் உங்கள் போனில் ஆப்ஸ்களுடன் வைரஸ்களை அனுப்பி உங்கள் போனை கண்காணிக்க, தகவல்களை திருட வாய்ப்புகள் உள்ளது. இதேபோல நம்பத்தகாத வெப்சைட்டில் இருந்து கோப்புகளை டவுன்லோடு செய்வதையும் தவிர்ப்பது நல்லது.

    3. ஆண்டி- வைரஸ் சாஃப்ட்வேரை பயன்படுத்துங்கள் :

    ஆண்டி- வைரஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துவது உங்கள் ஸ்மார்ட்போனில் Android security பிரச்னைகளை கவனித்து சரி செய்ய உதவுகிறது. Avast Mobile Security & Antivirus and Norton Mobile Security போன்ற சாஃப்ட்வேர்கள் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்ஸ் உங்கள் சாதனத்தில் மால்வேரைக் கண்காணிக்கும், மேலும் அவற்றை அகற்றவும் பயன்படுத்தலாம்.

    4. உங்கள் ஸ்மார்ட்ஃபோனை அடிக்கடி அப்டேட் செய்யுங்கள் :

    உங்கள் ஸ்மார்ட்போனிற்கு அப்டேட் மெசேஜ் வந்தால் அதனை கவனித்து அப்டேட் செய்வது அவசியம். நீங்கள் பயன்படுத்தும் OS-ன் சமீபத்திய அப்டேட்டிற்கு உங்கள் Android ஸ்மார்ட்போனை மேம்படுத்துவது முக்கியம். உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் ஆப்ஸ்களின் சமீபத்திய வெர்சனை அப்டேட்டை செய்து கொள்வது வைரஸ்கள் உங்கள் ஸ்மார்போனை பாதிக்காமல் தடுப்பதற்கான சிறந்த வழியாகும்.

    5. பாஸ்வோர்டுகள் சேமிக்கும் அம்சத்தை ஆப் செய்யவும் :

    வழக்கமாக பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போனில் பாஸ்வோர்டுகளை சேமிக்கும் பழக்கத்தை வைத்துள்ளோம். குறிப்பாக தினமும் பயன்படுத்தும் அப்ஸ்களில் பாஸ்வோர்டுகளை சேமிக்கும் அம்சத்தை ஆன் செய்து வைத்திருப்போம். இதனால் எளிதாக உள்நுழைந்து பயன்படுத்த முடியும். கூடுதலாக, நீங்கள் பாஸ்வோர்டுகள் மறந்துவிட்டால் அதை கண்டுபிடிப்பதில் நேரம் செவழிக்க விரும்பமின்றி இதனை செய்வோம். ஆனால் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பாதுகாக்க பாஸ்வோர்டுகளை சேவ் பண்ணி வைப்பதை தவிர்த்து விடுவது நல்லது. இதனால் உங்கள் போன் ஹேக் செய்யப்படுவது தவிர்க்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: