Home /News /automobile /

ப்ரீ-ஓன்ட் சேல்: உங்கள் கார் கீயை புதிய ஓனரிடம் ஒப்படைக்கும் முன் இதையெல்லாம் செய்து விடுங்கள்.!

ப்ரீ-ஓன்ட் சேல்: உங்கள் கார் கீயை புதிய ஓனரிடம் ஒப்படைக்கும் முன் இதையெல்லாம் செய்து விடுங்கள்.!

மாதிரி படம்

மாதிரி படம்

புதிய கார் வாங்க நினைத்து பல மாதங்களுக்கு முன்னர் காரை புக் செய்தவர்கள் கூட தற்போது நிலவி வரும் இந்த semiconductor chip பற்றாக்குறை காரணமாக தங்களது காரை இன்னும் பெற முடியாமல் காத்திருக்கின்றனர்.

  கொரோனா தொற்று பல்வேறு முக்கிய துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. தொற்று பரவல் காரணமாக உலகளவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக ஏற்பட்ட ஊழியர்கள் பற்றாக்குறையால் வாகன தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் செமிகண்டக்டர் சிப் (semiconductor chip) உற்பத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல மாதங்களாகியும் இன்னும் செமிகண்டக்டர் சிப் உற்பத்தி முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே உலகெங்கிலும் உள்ள ப்ரீ-ஓன்ட் வெஹிகிள் மார்க்கெட் (pre-owned vehicles markets) அதாவது பயன்படுத்திய வாகனங்களை விற்கும் பிசினஸ் இந்த கோவிட் கால கட்டத்தில் ஒரு பெரிய ஏற்றத்தை கண்டுள்ளது.

  புதிய கார் வாங்க நினைத்து பல மாதங்களுக்கு முன்னர் காரை புக் செய்தவர்கள் கூட தற்போது நிலவி வரும் இந்த semiconductor chip பற்றாக்குறை காரணமாக தங்களது காரை இன்னும் பெற முடியாமல் காத்திருக்கின்றனர். எப்போது அவர்களுக்கு தங்கள் புதிய கார் கிடைக்கும் என்பதற்கான விடை அவர்களுக்கே தெரியவில்லை. எனவே வாகனம் வாங்க நினைப்போரில் பலரது கவனம் pre-owned markets-ன் பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் காரணமாக pre-owned வாகனங்கள் முன்பை விட இப்போது அதிக விலையை பெறுகின்றன. நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி கொண்டிருக்கும் காரை விற்க முடிவு செய்துள்ளீர்கள் என்றால் இப்போது மிக முக்கியமானது மற்றும் வெளிப்படையானது என்னவென்றால் உங்கள் காருக்கு சிறந்த விலையை பெறுவதை உறுதி செய்வதாகும். அதிக விலையை கொடுத்து உங்கள் காரை வாங்க தயாராக இருப்பவரின் பின்னணியை நீங்கள் சரிபார்க்க வேண்டியது அவசியம். ஏனென்றால் நீங்கள் மோசடிக்கு இரையாகி விட கூடாது.

  நீங்கள் பயன்படுத்திய காரை செகண்ட்ஸில் விற்கும் போது அடுத்த ஓனரிடம் சாவியை ஒப்படைக்கும் முன் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே..

  ஆவணங்கள்..

  வாகனம் வாங்கும் போது உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக மற்றும் தயாராகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஏதேனும் ஆவணம் விடுபட்டால் அதற்கான நகலை உரிய அதிகாரிகளிடம் கோரி பெறுவது உங்கள் பொறுப்பு. உங்கள் வாகனத்தின் மீது இன்னும் கார் கடன் இருந்தால், நீங்கள் கடன் தொகையை செலுத்தி விட்ட பிறகு விற்கலாம் அல்லது உங்களிடமிருந்து காரை வாங்குபவர் கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்கலாம். அவர் ஏற்றால் உங்களிடமிருந்து வாகனத்தை வாங்கும் தொகையை குறைத்து கேட்பார்.

  தனிப்பட்ட உடமைகள் வாகனத்தில் இருக்கிறதா என சரிபார்க்கவும்..

  நீங்கள் விற்க போகும் உங்கள் வாகனத்தில் உங்களது தனிப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கவனமாகச் சரிபார்க்க வேண்டியது முக்கியம். ஆர்ம்ரெஸ்ட்டின் கீழே, கதவுகளில் உள்ள க்ளோவ்பாக்ஸ் மற்றும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள், முன் இருக்கைகளுக்கு கீழே, பூட் ஸ்பேஸ் மற்றும் இடுக்குகள் உள்ளிட்ட காரின் உள்ளே உள்ள அனைத்து பகுதிகளையும் செக் செய்து கொள்வது அவசியம்.

  ஸ்டிக்கர்ஸ் மற்றும் RFID-ஐ அகற்றவும்:

  அப்பார்ட்மென்ட் மற்றும் ஆபிஸ் போன்ற இடங்களுக்குள் நுழைய அனுமதி சீட்டாக இருந்து வந்த ஸ்டிக்கர்ஸ்களை உங்கள் காரில் இருந்து அகற்ற வேண்டும். கார் கண்ணாடி உட்பட வாகனத்தின் எந்த பகுதியில் அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தாலும் அவற்றை அகற்றவும். அதே போல FASTag RFID ஸ்டிக்கரையும் அகற்றவும்.

  ஃபேக்ட்ரி ரீசெட் (Factory reset)..

  தற்போதைய நவீன கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனில் உங்கள் மொபைல் டிவைஸிலிருந்து எடுக்கப்பட்ட முழு தகவல்களும் இருக்கும். எனவே உங்கள் டேட்டா பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, புதிய ஓனரிடம் காரை ஒப்படைக்கும் முன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனில் ஒரு எளிய ஃபேக்ட்ரி ரீசெட் செய்யுங்கள். ஏனென்றால் இனி அந்த கார் உங்களிடம் இருக்க போவதில்லை.

  போதுமான எரிபொருள்..

  நீங்கள் உங்கள் காரை இன்னொருவருக்கு விற்று விட்டீர்கள் என்பதற்காக அவர் உங்கள் காரை எடுத்து செல்ல வரும் போது காரில் போதுமான எரிபொருள் இருக்க வேண்டாம் என்பதில்லை. உங்கள் காரை அவரது காராக மாற்றி எடுத்து செல்லும் அந்த நபர் பாதி வழியிலேயே எரிபொருளுக்காக பெட்ரோல் பங்கை நாடும் அவசியம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது அடிப்படை மரியாதை. எனவே புதிய ஓனரிடம் கார் சாவியை ஒப்படைக்கும் போது காரில் போதுமான எரிபொருள் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Automobile, Car

  அடுத்த செய்தி