புதிய கார்களை விட பயன்படுத்திய கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் புதிய கார்களைவிட பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய கார்களை விட பயன்படுத்திய கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்
கார்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 11:19 PM IST
  • Share this:
கொரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வாகன துறையில் ஏற்படும் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த தேவைக்கு மத்தியில், புத்தம் புதிய கார்களுடன் ஒப்பிடுகையில் பயன்படுத்திய கார்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பாலின வாரியாக பயன்படுத்தப்பட்ட கார் வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 20 சதவீதம் பெண்கள். வயது வாரியாக, பட்ஜெட் கார்களை 24 லிருந்து 27 வயதுக்குட்பட்ட நுகர்வோர் விரும்புகின்றனர் என்றும் செடான்ஸ் போன்ற கார்களை 30-32 இடைப்பட்ட வயதுடையவர்கள் விரும்புகின்றனர் மற்றும் பெரும்பாலும் 38-40 வயதுடையவர்கள் ஆடம்பர கார்களை விரும்புவதாகவும் சமீபத்திய கணக்கெடுப்பின்படி தெரியவந்துள்ளது.

பயன்படுத்திய கார்களின் சந்தை விலை 40 சதவீதம் மெட்ரோவிலும் மற்றும் 60 சதவீதம் மெட்ரோ அல்லாதது, அதே நேரத்தில் பயன்படுத்தப்பட்ட கார் குத்தகைக்கு 90 சதவீதம் மெட்ரோவிலும் மற்றும் 10 சதவீதம் மெட்ரோ அல்லாததில் அடங்கும் என்று பயன்படுத்திய கார் குத்தகை பிரிவின் ஸ்டார்ட்-அப் 'பம்பம்பம்' கணக்கெடுப்பில் தெரியவருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் அல்லாத பகுதிகளைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட நுகர்வோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கார் வாங்கிய முதல் ஆண்டில் கார் மதிப்பில் மிகக் குறைவை ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

மேலும், முதல் முதலில் கார் வாங்குபவர்களில் 41 சதவிகிதத்தினர், அதுவே பயன்படுத்திய கார் வாங்குபவர்கள் 55 சதவீதம் பேர் உள்ளனர். ஏனெனில் அவர்கள், குடும்பத்தில் பல கார்களை கொண்டவர்கள் ஆகும். மேலும், 4 சதவீதம் பேர் மட்டுமே மாற்று கார்களை வாங்குபவராக உள்ளனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், பிறர் பயன்படுத்திய காரை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் விலை மலிவு என்பதை கண்டறிந்தனர்.


அதுமட்டுமன்றி பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கான காரணம் பணத்திற்கான மதிப்பு, வீட்டில் இரண்டாவது கார் மற்றும் வாகனம் ஓட்டுவதை கற்றுக்கொள்வதற்கு போன்ற பிற காரணங்கள் அடங்கியுள்ளது. பயன்படுத்தப்பட்ட கார் வாங்குபவர்களில் வட இந்தியாவில் 36 சதவீதமும், மேற்கில் 27 சதவீதமும், தெற்கில் 26 சதவீதமும் மற்றும் கிழக்கில் 11 சதவீமும் உள்ளனர். மேலும், "24 மாதங்களுக்கு ஒரு காரை வாங்குவதும் அதை பராமரிப்பதயும் ஒப்பிடும்போது, ​​24 மாதங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட கார் மிகவும் மலிவு மற்றும் தொந்தரவில்லாதது என்றும் கூறப்படுகிறது.


விநியோகஸ்தர்கள் மீதான நம்பிக்கையின்மை, பயன்படுத்தப்பட்ட காரின் இடத்தில் குறைந்த ஊடுருவல், பயன்படுத்தப்பட்ட காரில் பழுதுபார்க்கும் ஆபத்து, வெளிப்படையான விலை நிர்ணயம், மூன்றாம் கை பயன்படுத்திய காரின் குறைந்த மறுவிற்பனை மதிப்பு தொடர்பான சிக்கல்கள் அதிக தேய்மானத்தின் விளைவாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் குத்தகையின் வளர்ச்சியைத் தூண்டும் சில காரணிகள்" என்றும் பயன்படுத்திய கார்களை குத்தகைக்கு எடுப்பது குறித்து, 'பம்பம்பம்' இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை வளர்ச்சி அதிகாரியான சமீர் கல்ரா கூறினார்.

 
First published: September 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading