Ferrari அறிமுகம் செய்யும் முதல் எஸ்யூவி - உலகின் அதிவேக கார் என அங்கீகாரம்

தற்போதைய சூழலில் இப்புதிய எஸ்யூவி தயாரிக்கும் ப்ராஜேக்ட் கோட் "Purosangue" என்றழைக்கப்படுகிறது. "Purosangue" என்றால் தூய்மையான ரத்தம் என்பது அர்த்தம்.

Web Desk | news18
Updated: September 21, 2019, 12:36 PM IST
Ferrari அறிமுகம் செய்யும் முதல் எஸ்யூவி - உலகின் அதிவேக கார் என அங்கீகாரம்
ஃபெராரி
Web Desk | news18
Updated: September 21, 2019, 12:36 PM IST
பென்ட்லி, லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ் வரிசையில் ஃபெராரி (Ferrari) நிறுவனமும் தனது முதல் எஸ்யூவி ரக காரை அறிமுகம் செய்ய உள்ளது.

முதல் எஸ்யூவி-யின் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் Ferrari வருகிற 2022-ம் ஆண்டு காரை விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதன்முறையாக எஸ்யூவி தயாரிப்பு குறித்த அறிவிப்பை Ferrari வெளியிட்டது. 2020-ம் ஆண்டு Ferrari எஸ்யூவி விற்பனை இருக்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் வெளியீடு 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவி கார் மட்டும் அறிமுகமானால் உலகின் அதிவிரைவு கார் ஆக இருக்கும் என வெளியீட்டுக்கு முன்னரே Ferrari-க்கு அங்கீகாரம் கிடைத்து வருகிறது. கூடுதலாக இந்நிறுவனம் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் புதிதாக 15 புதுFerrari மாடல்களை சர்வதேச சந்தையில் களம் இறக்கவும் முடிவு செய்துள்ளது.


புதிதாக வெளியாக உள்ள Ferrari எஸ்யூவி V6, V8 மற்றும் V12 என்ஜின் ரகங்களாக வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது. ஹைப்ரிட் ரகமாக அல்லது எலெக்ட்ரிக் ரகமாக இருக்குமா என்ற கேள்வியும் நீடித்து வருகிறது. தற்போதைய சூழலில் இப்புதிய எஸ்யூவி தயாரிக்கும் ப்ராஜேக்ட் கோட் "Purosangue" என்றழைக்கப்படுகிறது. "Purosangue" என்றால் தூய்மையான ரத்தம் என்பது அர்த்தம். இந்தக் கார் வெளியாகும் போது பென்ட்லி பெண்டேகா, லம்போர்க்கினி உருஸ், ரோல்ஸ் ராய்ஸ் குலினன், ஆஸ்டன் மேட்ரிக்ஸ் DBX ஆகிய கார்களுக்குப் போட்டியாக வரலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ’செகண்ட் ஹேண்ட்’ கார்களுக்கு அதிகரிக்கும் மவுசு..!

புதிய மோட்டார் வாகன சட்டம்... மற்ற மாநிலங்கள் கூறுவது என்ன?

Loading...

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...