50 வருடங்கள் பழமையான ஃபெராரியின் விலை ரூ.310 கோடி

news18
Updated: July 2, 2018, 9:39 PM IST
50 வருடங்கள் பழமையான ஃபெராரியின் விலை ரூ.310 கோடி
news18
Updated: July 2, 2018, 9:39 PM IST
ஃபெராரி நிறுவனத்தின் விண்டேஜ் காரான பெராரி  250 ஜிடிஓ  என்ற வின்டேஜ் காரை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆர்.எம். சோத்பை எனும் நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஏலத்திற்கு விடவுள்ளது.

இந்த காரின் அடிப்படை ஏலத் தொகை 310 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏலம் விடப்பட்ட விண்டேஜ் கார்களில் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கார் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபெராரி ஜிடிஓ 250 இன்ஜின்

1953-ம் ஆண்டு  முதல் 1964 ஆண்டு வரை  250 ஜிடிஓ பெராரி கார்கள் மொத்தமாக 36 மட்டுமே தயாரிக்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் ஏலத்தில் விடப்படும் இந்தக் கார் ஃபெராரி தயாரித்த 36 கார்களில் மூன்றாவது காராகும். தொழில் அதிபர் கிரெக் விட்டன் இந்தக் காரை 2000-ம் ஆண்டு வாங்கியுள்ளார். இன்றும் அதே பழைய ஒரிஜினல் இன்ஜின், கியர் பாக்ஸுடன் இருப்பது இந்தக் காருக்கு கூடுதல் சிறப்பாகும்.


Loading...

ஃபெராரி ஜிடிஓ 250 ஸ்டேரிங் வீல்

இதுவரை 20 ரேஸ்களில் கலந்துகொண்டுள்ள இந்த கார் 9 ரேஸ்களில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு முறைக் கூட விபத்துக்கு உள்ளாகாத கார் என்பது இதன் தனிச் சிறப்பாகும். கடைசியாக இந்த வகை ஃபெராரி கார் 2014-ஆம் ஆண்டு ரூ.261 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. அதுவே இப்போது வரை உலக சாதனையாக இருந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் ஏலம் போகப்போகும் கிரெக் விட்டனின் ஃபெராரி இதை விட அதிக விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: July 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...