காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் விலையேற்றங்களின் வரலாறு காணாத உயர்வுக்கு மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றன. எனினும் தற்போது வரை எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் (குறிப்பாக இ-கார்) எதிர்கொள்ளும் மிக பெரிய பிரச்சனை அதன் சார்ஜிங் நேரம் ஆகும். நம் நாட்டில் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போதுமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது. அதே நேரம் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய ஆகும் நேரம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
சில எலெக்ட்ரிக் கார்களை சார்ஜிங் செய்ய 30 நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை ஆகிறது. ஆனால் ஒரு சாதாரண காரில் பெட்ரோல் போட எடுக்கும் நேரத்தை விட குறைவான நேரத்தில் இ-வாகனத்தை சார்ஜ் செய்ய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.!! சுவிட்சர்லாந்தை சேர்ந்த மொராண்ட் (Morand) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்யக்கூடிய புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக கூறி இருக்கிறது.
சுவிஸ் ஸ்டார்ட்அப்பான Morand உருவாக்கி இருக்கும் புதிய பேட்டரி தொழில்நுட்பம் ICE வாகனத்தில் எரிபொருள் நிரப்ப எடுக்கும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய eTechnology அதிவேக ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி பேக் ஆகும். இந்த புதிய தொழில்நுட்பம் பாரம்பரிய பேட்டரி மற்றும் அல்ட்ரா கெப்பாசிட்டர் டெக்னலாஜியை பயன்படுத்தும் ஹைப்ரிட் தொழில்நுட்பமாக இருக்கும். இதன் மூலம் வெறும் 72 வினாடிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜிங் செய்ய முடியும் என்று Morand eTechnology நிறுவனம் கூறுகிறது.
Read More : ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்... அசத்தலான எலெக்ட்ரிக் கார்!
அதே நேரம் இந்த ஹைப்ரிட் டெக்னலாஜியை பயன்படுத்துவது பாரம்பரிய லித்தியம் அயன் பேட்டரிகளை விட அதிக ஆயுளை கொடுக்கும். அல்ட்ரா கெப்பாசிட்டர் நுட்பத்தில் மட்டுமே மாற்றம் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு ப்ரோடைப் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறி இருக்கும் Morand நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் F1 டிரைவரான பெனாய்ட் மொராண்ட் (Benoit Morand), இருப்பினும் இந்த புதிய டெக்னலாஜி 100 kW-க்கும் அதிகமான பேட்டரி பேக்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்ட லாங்-ரேஞ்ச் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இது பொருந்தாது. இந்த டெக்னலாஜி கார்கள் மற்றும் ட்ரோன்கள் மற்றும் இ-பைக்குகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறி இருக்கிறார்.
இந்த டெக்னாலஜி 50 ஆயிரம் டெஸ்டிங் சர்கிள்ஸ்காலத்தில் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக பெனாய்ட் மொராண்ட் கூறி உள்ளார். மேலும் இந்த ஹைபிரிட் டெக்னலாஜி மற்றும் பாரம்பரிய லித்தியம் அயன் பேட்டரி மூலம் சார்ஜ் செய்யும் போது இதன் திறன் மிகவும் குறைவாகவே இருந்தது. மேலும் வழக்கமான EV பேட்டரிகளில் இல்லாத வகையில், இந்த டெக்னாலஜி அதிக வெப்பநிலையில் கூட நன்றாக வேலை செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். Morand நிறுவனம் தனது இந்த புதிய டெக்னலாஜியை மார்கெட்டிற்கு பார்ட்னர் நிறுவனத்துடன் கொண்டு வர இணைந்து செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில் லித்தியம்-அயன் பேட்டரி டெக்னலாஜியை விட இது அதிக விலை கொண்டதாக இருக்கும். எனினும் கேம்-சேஞ்சராக மாற உள்ள ஹைபிரிட் டெக்னலாஜியின் விலையை குறைக்க மற்றும் உற்பத்தியை அதிகரிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதை நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric bike, Electric Cars, Tamil Nadu