Home /News /automobile /

இதுவரை வழங்கப்பட்டுள்ள Fastag எவ்வளவு? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்

இதுவரை வழங்கப்பட்டுள்ள Fastag எவ்வளவு? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்

பாஸ்ட் டேக்ஸ்

பாஸ்ட் டேக்ஸ்

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஜூலை 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3.54 கோடி பாஸ்ட் டேக்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
நாடு முழுவதும் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சுங்கக் கட்டணம் ஃபாஸ்ட் டேக்ஸ் மூலம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், வாகன ஓட்டிகளின் கடும் எதிர்ப்பால் படிப்படியாக ஆன்லைன் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஸ்ட் டேக்ஸ் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஜூலை 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3.54 கோடி பாஸ்ட் டேக்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பாஸ்ட் டேக்ஸ் மூலம் கட்டணம் செலுத்தவது 80 விழுக்காட்டில் இருந்து 96 விழுக்காடாக அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Fastag என்றால் என்ன?

NETC, NPCI ஆகியவை இணைந்து உருவாக்கிய மின்னணு கட்டண முறை தான் FASTAG. RFID (Radio-frequency Identification) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் வாகனம் நிறுத்தப்படாமல் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Fastag என்பது உங்கள் காரின் window -வில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு ஸ்டிக்கர் ஆகும். இதில் இருக்கும் பார்கோடு( Barcode) வழியாக உங்கள் வாகனத்தின் பதிவு விவரங்கள் இணைக்கப்பட்ட RFID-ஐ அடையாளம் கண்டு பணம் வசூலிக்கும் செயல்முறை ஆகும். உங்கள் வாகனம் சுங்கச்சாவடியை கடக்கும்போது அங்கு மேலே இருக்கும் ஸ்கேனர் உங்கள் வாகனத்தின் RFID-ஐ ரீட் செய்து தேவையான கட்டணத்தை வசூலிக்கும். இவையணைத்து சுங்கச்சாவடியை நீங்கள் கடக்கும் நொடிப்பொழுதில் நடந்தேறிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

FASTag-ன் நன்மை என்ன?

தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதிகள் 2008 இன் படி, FASTag பயனர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட பாதைகள் டோல் பிளாசாக்களில் உள்ளன. நீங்கள் அந்தவழியில் செல்லும்போது QR code ஸ்கேனர் மூலம் எளிதாக கட்டணம் வசூலிக்கப்படும். நீங்கள் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் பயணம் மற்றவர்களைக் காட்டிலும் விரைவானதாக இருக்கும். சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவருவதற்கும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நேர விரயத்தை போக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அவசர கால வாகனங்கள் இதன்மூலம் விரைவாக சுங்கச் சாவடிகளை கடக்க முடியும். சில்லறை கொடுப்பதில் தாமதம், வாக்குவாதம் ஆகியவை தடுக்கப்படும். எரிபொருள் வீணாவது குறைவதுடன், காற்று மாசும் சுங்கச்சாவடி இருக்கும் பகுதியில் குறையும்.

FASTag வாங்குவது எப்படி?

FASTag வாங்குவதற்கு உங்களுக்கு நிறைய வழிகள். உங்கள் காருக்கு ஒரு ஃபாஸ்டேக் வாங்க வேண்டுமானால், உங்களுக்கான அடையாள சான்றையும், வாகன பதிவு ஆவணங்களையும் எடுத்துச் சென்று நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் வாங்கலாம். அமேசான் மற்றும் ஸ்நாப் டீல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மூலம் வாங்கிக்கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோட்டக் உள்ளிட்ட வங்கிகளில் வாங்கிக்கொள்ளலாம். Paytm wallet மூலமும் Fastag -வாங்கலாம்.

Fastag வாங்குவதற்கான செலவு என்ன?

Fastag வாங்குவதற்கான செலவு இரண்டு விஷயங்களைப் பொறுத்தது. முதலாவதாக, நீங்கள் அதை வாங்கும் வாகனத்தின் வகை, அதாவது கார், ஜீப், வேன், பஸ் அல்லது டிரக் உள்ளிட்டவைகளை பொறுத்தது. இரண்டாவதாக, நீங்கள் ஃபாஸ்டேக்கை வாங்கும் வங்கியின் கொள்கைகள் மற்றும் டெபாசிட் கட்டணம் மற்றும் செக்யூரிட்டி ஆகியவற்றை பொறுத்தது ஆகும். உதாரணமாக, இப்போது நீங்கள் Paytm இலிருந்து ஒரு காருக்கான Fastag -ஐ ரூ .500 க்கு வாங்கலாம். இதில் 250 ரூபாய் திருப்பிச் செலுத்தக்கூடிய உத்தரவாத தொகையாகவும், 150 ரூபாய் மினிமம் பேலன்ஸாகவும் இருக்கும். இந்த Fastag -ஐ icici வங்கியிடமிருந்து நீங்கள் வாங்கினால், கார்டு கொடுப்பதற்கான கட்டணமாக 99.12 ரூபாயும், ரூ. 200 வைப்புத் தொகையாகவும், ரூ .200 மினிமம் பேலன்ஸாகவும் செலுத்துவீர்கள். இரண்டுக்கு சிறிய விலை வேறுபாடுகள் இருந்தாலும், வங்கிகள் அவ்வப்போது ஆஃபர்களை வாரி வழங்குகின்றன.

Also read... இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் நிலையம் – பொது மக்களுக்காக நவி மும்பையில் திறப்பு!

Fastag -ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

இது மிகவும் எளிமையானது, உங்களுக்கு இரண்டு சாய்ஸ் உள்ளன. முதலாவதாக, வங்கியால் உருவாக்கப்பட்ட ஃபாஸ்டாக் wallet பயன்படுத்துவது, அதனை வங்கி கொடுக்கும் வழிமுறைகளைப் பொறுத்து NetBanking, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் அல்லது யுபிஐ (UPI) ஆகியவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வதும் ஆகும். இரண்டாவதாக, உங்களிடம் Paytm மற்றும் PhonePe போன்ற மொபைல் வாலட் இருந்தால் அதன்மூலம் எந்தவொரு வங்கியின் ஃபாஸ்டேக்கையும் ரீசார்ஜ் செய்யலாம்.

FASTag வேலிடிட்டி என்ன?

ஒரு FASTag வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லுபடியாகும். FASTag கணக்கை தொடர்ந்து ரீச்சார்ஜ் செய்துவந்தால் அதற்கு எந்த வேலிடிட்டியும் கிடையாது. இதனால், எப்போதும் உங்களின் Fastag wallet ஆக்டிவாகவே இருக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Fastag

அடுத்த செய்தி