Home /News /automobile /

“Fastag உதவியால் ஆண்டுக்கு 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும்“- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.!

“Fastag உதவியால் ஆண்டுக்கு 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும்“- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.!

Fastag

Fastag

Fastag | இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் போது ஏற்படும் டிராஃபிக்கால் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்த நிலையில் தான், அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையெல்லாம் சரிசெய்யும் விதமாகவும், வாகன ஓட்டிகளின் பணத்தையும் நேர விரயத்தைப் போக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சுங்கக்கட்டணம் ஃபாஸ்டாக் மூலம் செலுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பல எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் கடந்த 2 ஆண்டுகளுக்குப்பிறகு முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் விதிகள் 2008 ன் படி, ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பம் மூலம் Fastag செயல்படுகிறது. NETC, NPCI ஆகியவை இணைந்து உருவாக்கிய மின்னணு கட்டண முறை தான் FASTAG. RFID (Radio-frequency Identification) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் வாகனம் நிறுத்தப்படாமல் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதாவது வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டப்படிருக்கும் ஸ்டிக்கர்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது, தானாக ஸ்கேன் செய்யப்பட்டு, அந்த வாகனத்துக்கான சுங்கக்கட்டணம் அதன் வங்கிக்கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. கார் ஓட்டுநர்களின் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க உதவும் Fastag எப்படி நம் வாழ்க்கையை பல வழிகளில் மாற்றியுள்ளது. இதோ என்னென்ன என இங்கே தெரிந்துக்கொள்வோம்.Fastag எந்தளவிற்கு மக்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது.?

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் Fastag குறித்து பேசுகையில், ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் இருந்தாலும் தற்போது மக்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது என தெரிவித்தார். குறிப்பாக இதனைப்பயன்படுத்துவதன் மூலம் விரைவாக சுங்கச்சாவடிகளைக் கடக்கவும், சில்லறை கொடுப்பதில் சிரமம் இல்லாமல் வாக்குவாதமும் தடுக்க முடிகிறது.

Also Read : ஸ்கார்பியோ எஸ்யூவி மீது ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - அசத்தும் மஹிந்திரா.! 

மேலும் நீங்கள் fastag ஐ பயன்படுத்தும் போது,உங்களது வாகனம் மட்டுமில்லாமல் பிற வாகன ஓட்டுனர்களின் எரிபொருளைச் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது.கடந்த 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் பாஸ்டேக் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் வீணாவது குறைவதுடன் வாகனங்கள் வெளியிடும் co2 வைக்குறைத்து காற்று மாசுபாட்டைத் தடுக்க உதவியாக பாஸ்டேக் மாறியுள்ளது.

Also Read : பஜாஜ் மற்றும் KTM இணைந்து உருவாக்கும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்!

குறிப்பாக தற்போது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையால் இயக்கப்படும் ஒரு புதுமையான மின்னணு கட்டண வசூல் அமைப்பாக உள்ளது. மேலும் சுங்கச்சாவடி பயனர்கள் ரீசார்ஜ் செய்வதற்கும் டாப்-அப் செய்வதற்கும் வாகன உரிமையாளரின் ப்ரீபெய்ட் கணக்கில் ஃபாஸ்ட் டேக் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் பணவரித்தனைகளுக்காக வாகனங்களை சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் வாகனங்களை இயக்க அனுமதிக்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Fastag, India

அடுத்த செய்தி