திருடப்பட்ட கார்... FASTag அலெர்ட் மூலம் விரைந்து மீட்பு...!

Fastag
- News18
- Last Updated: December 27, 2019, 4:57 PM IST
பாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவது எளிமையாகும் என்பது தெரிந்திருந்தாலும், திருடு போன காரை போலீசார் இதன் மூலம் உடனடியாக கண்டறிந்துள்ளனர்.
சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்லும்போது பாஸ்ட்டேக் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஜனவரி 15-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் பொருத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 66 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாஸ்டேக் என்பது தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஸ்டிக்கராகும். இதற்குள் நுண்ணிய சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும். வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இதை ஒட்டிக்கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர்களில் உள்ள குறியீடு ஆர்.எப்.ஐ.டி. என்று சொல்லப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.
வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கர், சுங்கச்சாவடிகளை நெருங்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கருவியுடன் உடனடியாக தொடர்பை ஏற்படுத்தும். அந்த வாகனத்தின் ரகம் என்ன? அதற்காக வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் எவ்வளவு? என்பதை உடனடியாக துல்லியமாக கணிக்கும்.வாகன ஓட்டியின் வங்கி கணக்கு இந்த கருவியோடு இணைந்திருப்பதால், அதிலிருந்து சுங்கக் கட்டணமாக அந்த வாகனம் செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் தானாக எடுத்துக்கொள்ளும். கட்டணம் எடுக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்தப்படும்
எனவே சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ ஒட்டப்பட்ட வாகனங்களுக்கென்று தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியில் வாகனங்கள் நிற்காமல் போய்க்கொண்டே இருக்க இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுங்கச்சாவடிகளை வேகமான கடக்க கொண்டு வரப்பட்ட பாஸ்டேக் முறையானது, திருடப்பட்ட காரை கண்டுபிடிக்க உதவியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ராஜேந்திர ஜக்தாப் என்பவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்கார்பியோ கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். அரசின் அறிவுத்தலின்படி, சமீபத்தில் தனது காருக்கான பாஸ்டேக்-ஐ வாங்கி ஒட்டியுள்ளார். கடந்த 23-ம் தேதி காலை 4.38 மணிக்கு சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்காக 35 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அவருக்கு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.
இதனை அடுத்து, காலை 5.50 மணிக்கு அடுத்து இதேபோல, மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதனால், சுதாரிப்பான ஜக்தாப், வீட்டுக்கு வெளியே சென்று காரைப் பார்க்க, அங்கு கார் இல்லை. யாரோ திருடி எடுத்துச் சென்றது அவருக்கு தெரிய வந்துள்ளது. உடனே, காவல் நிலையம் சென்று அவர் புகாரளித்துள்ளார்.
உடனே விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், எஸ்.எம்.எஸ்.இல் குறிப்பிடப்பட்ட சுங்கச்சாவடியை குறித்து வைத்துக்கொண்டனர். மேலும், காரை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிக்க, அந்தக் கார் மும்பையை நெருங்கிக்கொண்டுள்ளது தெரிய வந்தது.
இதனை அடுத்து, மும்பையில் உள்ள காவல் நிலையத்தை புனே போலீசார் உஷார் படுத்தினர். காரின் எண் மற்றும் அடையாளம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து, கோட்பாந்தர் சாலையில் உள்ள ஹிரானாண்டானி எஸ்டேட் பகுதியில் கார் நீண்ட நேரம் நிற்பது தெரிய வர, அங்கே போலீசார் விரைந்து சென்றனர்.
ஆனால், காரை திருடி வந்த நபர், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை அடுத்து கார், உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Also Read;
இன்னும் FASTag வாங்கவில்லையா? எப்படி வாங்குவது? எவ்வளவு கட்டணம்?
Also See...
சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்லும்போது பாஸ்ட்டேக் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஜனவரி 15-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் பொருத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 66 சதவீதமாக அதிகரித்துள்ளது.