• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • அதிகரிக்கும் பாஸ்டேக் பயன்பாடு...

அதிகரிக்கும் பாஸ்டேக் பயன்பாடு...

Fastag

Fastag

  • Share this:
    பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாதத்தில் பாஸ்ட்டேக் முறையில் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 66 சதவீதம் அதிகரித்துள்ளது.

    சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்லும்போது பாஸ்ட்டேக் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஜனவரி 15-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் பொருத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 66 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    நவம்பர் மூன்றாவது வாரத்தில் 26 கோடியே 40 லட்சம் ரூபாய் பாஸ்ட்டேக் முறையில் வசூலான நிலையில், இது டிசம்பர் 3-வது வாரத்தில் 44 கோடியை எட்டியுள்ளது. இதேகாலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவது 51 கோடியில் இருந்து 35 கோடியாக சரிந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: