பட்ஜெட் 2021 - வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி (VSP) என்றால் என்ன? முழு விவரம்!

பட்ஜெட் 2021 - வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி (VSP) என்றால் என்ன? முழு விவரம்!

கோப்புப்படம்

ஸ்கிராப்பேஜ் (SCRAPPING) பாலிசியை முழுமையாக மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இந்த கொள்கை வெளியானவுடன், பழைய வாகனங்களை மாற்ற முன்வருவோருக்கு கூடுதல் சலுகைகளை அரசு மற்றும் மோட்டார் நிறுவனங்கள் வழங்கும் என கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை (Vehicle Scrappage Policy) நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில், அதைப்பற்றிய விளக்கத்தை இங்கு காணலாம்.

வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களின் கோரிக்கை 2021 மத்திய பட்ஜெட் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விரைவில் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 15 நாட்களுக்குள் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை குறித்த வரைவு வெளியிடப்படும் என அறிவித்தார். ஆனால், பெரும்பாலானோருக்கு வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை தொடர்பான ஐடியா இல்லாததால், அவற்றில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதை இங்கே காணலாம்.

வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை:

பயணிகள் வாகனம் 20 ஆண்டுகளும், வணிக வாகனம் 15 ஆண்டுகளும் ஆயுட்காலத்தை கொண்டுள்ளன. அதன்பிறகு அவற்றின் செயல்பாடு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருக்கும் என்பதால், அந்த வாகனங்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும். இதுதான் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை ஆகும். இந்தியாவில் இதுவரை இந்த கொள்கை நடைமுறையில் இல்லாத நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

திட்டத்தின் நோக்கம்:

காலாவதியான வாகனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்குவதால் விபத்துகளுக்கும் காரணமாக அமைக்கின்றன. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் காலவதியான வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறையும். வாகன சந்தையில் புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும். இதனால், ஆட்டோ மொபைல் துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காலாவதியான வாகனங்கள் அனைத்தும் அகற்றப்படுமா?

பயணிகள் வாகனத்துக்கு 15 ஆண்டுகளும், வணிக வாகனங்களுக்கு 20 ஆண்டுகளும் லைப் டைமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த லைப் டைமை கடந்த அனைத்து வாகனங்களும் அகற்றப்படுமா? என்றால், இல்லை. வாகனத்தின் லைப் டைம் முடிந்த பின்னர் வாகனத்தினை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த சோதனையில் தேர்ச்சி பெறும் வாகனங்கள் மீண்டும் இயக்க அனுமதிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

வாகனத்துக்கான பிட்னஸ் டெஸ்ட்:

ஒரு வாகனம் சாலையில் செல்வதற்கான தகுதியை பெற்றிருக்கிறதா என்பதை மாசுக்கட்டுப்பாடு சோதனை சான்றிதழ் தீர்மானிக்கிறது. அதுமட்டுமல்லாது பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் மட்டுமே வாகனம் தரம் தீர்மானிக்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, வாகனத்தின் தரத்தை தீர்மானிக்கும் நிலையங்களில் வைக்கப்படும் அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தரமான வாகனம் என நிர்ணயிக்கப்பட்டு இயக்குவதற்கு அனுமதிக்கப்படும். இந்த சோதனைகளுக்கு சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. அத்துடன் கூடுதலாக பசுமை வரியும் விதிக்கப்படும்.

Also read... இந்தாண்டு அறிமுகமாகும் ஓலா எலக்டிரிக் ஸ்கூட்டர் - ஒன் டைம் சார்ஜில் இத்தனை கிலோ மீட்டர் பயணிக்கலாமா?

சோதனையில் வாகனம் தேர்வாகவில்லை என்றால்?

உங்கள் வாகனம், தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெறவில்லை என்றால் புதுபிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாது. இதனால், உங்கள் வாகனத்தை சாலையில் இயக்க முடியாது. போக்குவரத்து விதிப்படி ஆர்.சி இல்லாமல் வாகனத்தை இயக்குவது சட்டவிரோதமாகும். ஒரு வாகனத்துக்கு 3 முறை வாகன தகுதி சோதனை வாய்ப்பு வழங்கப்படும். அவற்றில் தோல்வியுற்றால் நிச்சயமாக உங்கள் வாகனத்தை சாலையில் இயக்க முடியாது.

ஸ்கிராப்பேஜ் பாலிசியின் நன்மைகள்:

ஸ்கிராப்பேஜ் (SCRAPPING) பாலிசியை முழுமையாக மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இந்த கொள்கை வெளியானவுடன், பழைய வாகனங்களை மாற்ற முன்வருவோருக்கு கூடுதல் சலுகைகளை அரசு மற்றும் மோட்டார் நிறுவனங்கள் வழங்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு சலுகைகள் வழங்கப்படவில்லையென்றால், பணத்தை மிச்சப்படுத்த வாகன உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறுவார்கள் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: