ஏர் பப்பிள் ஒப்பந்தம் என்றால் என்ன? இதில் உள்ள 16 நாடுகள் எவை? முழு விபரங்கள்

கொரோனா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர ஏர் பப்பில் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஏர் பப்பிள் ஒப்பந்தம் என்றால் என்ன? இதில் உள்ள 16 நாடுகள் எவை? முழு விபரங்கள்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 10, 2020, 4:37 PM IST
  • Share this:
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சர்வதேச விமான சேவையை ‘ஏர் பப்பிள்' முறையில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதன்படி ஓமன் உட்பட 16 நாடுகளுடன் இந்திய அரசு ‘ஏர் பப்பிள்' ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறினார். இந்த பட்டியலில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், தற்போது இத்தாலி, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் கஜகஸ்தான், உக்ரைன் போன்ற நாடுகளுடன் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

ஏர் பப்பில் ஒப்பந்தம் என்பது கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளால் விதிக்கப்பட்ட பயணத் தடைக்கு மத்தியில் பயணக் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்காக பல்வேறு நாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒப்பந்தம் செய்து விமான பயணத்தை எளிதாக்குவதாகும். கொரோனா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர ஏர் பப்பில் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் வந்தே பாரத் மிஷன் மற்றும் ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தம் ஆகிய இரு வழிகளில் மட்டுமே சர்வதேச விமானங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மே 6, 2020 முதல் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சர்வதேச விமானத்தை மேற்கொண்டுள்ளனர்.

வந்தே பாரத் மிஷன் கீழ் இதுவரை 17,11,128 பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர் மற்றும் 2,97,536 பேர் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர் என ஹர்தீப் சிங் பூரி தகவல் அளித்துள்ளார். சரிவில் உள்ள பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு ஊரடங்கு நடைமுறைகளை தளர்த்தி வருகிறது. இதனால் வணிகம், கல்வி பயணம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அதிகமான மக்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். இதற்கென மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


சர்வதேச விமான பயணங்களை மேற்கொள்ள விரும்பும் பயணிகள் ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தம் மற்றும் விதிமுறைகளின் கீழ் எந்தெந்த நாடுகக்கு செல்லலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.

ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் நீங்கள் எந்தெந்த நாடுகளுக்கு விமானத்தில் செல்ல முடியும்?

இந்தியா ஆரம்பத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்த செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மொத்தம் 16 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. அவற்றின் பட்டியல் இங்கே :* பிரான்ஸ்,
*ஜெர்மனி,
*அமெரிக்கா,
*இங்கிலாந்து,
*கனடா,
*மாலத்தீவுகள்,
*ஐக்கிய அரபு அமீரகம்,
*கத்தார்,
*பஹ்ரைன்,
*நைஜீரியா,
*ஈராக்,
*ஆப்கானிஸ்தான்,
*ஜப்பான்,
*கென்யா,
*பூட்டான்,
*ஓமன்.

ஏர் பப்பிள் என்றால் என்ன?

ஏர் பப்பிள் என்பது COVID-19 காரணமாக வழக்கமான சர்வதேச விமானங்களை இயக்க தடை விதித்துள்ள நிலையில், வர்த்தக நோக்கத்தில் விமான சேவைகளை தொடங்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இந்த ஏற்பாட்டின் கீழ், இரு நாடுகளிலிருந்தும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும் இந்த ஒப்பந்தத்தில் மிஷன் வந்தே பாரத் போலல்லாமல், இந்திய விமான கேரியர்கள் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

Also read... பறக்கும் விமானத்தின் கழிவறையில் கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்த டாக்டர் சைலஜா - குவியும் பாராட்டுக்கள்வந்தே பாரத் மிஷன் மற்றும் ஏர் பப்பிள் ஒப்பந்தம் இடையேயான வித்தியாசம்!

வந்தே பாரத் மிஷன் போலல்லாமல், ஏர் பப்பில் ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தமாகும். இது அரசாங்கத்தில் பதிவு செய்யாமல் பயணிகள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது. வந்தே பாரத் மிஷனில், பயணம் செய்ய விரும்பும் நபர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல தங்கள் பெயரை இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஏர் பப்பிள் ஒப்பந்தத்தில், குறைவான செலவில் இரு நாடுகளிலிருந்தும் விமானங்கள் பறக்க அனுமதிக்கின்றன, ஆனால் எந்தவொரு விமானமும் பறக்க அனுமதிக்காத நாடுகளில் மட்டுமே மிஷன் வந்தே பாரத் செயல்படுத்தப்படுகிறது.

ஏர் பப்பிள் ஒப்பந்தத்தில் சுற்றுலா விசாக்கள் செல்லுபடியாகுமா?

ஆம், துபாய், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகள் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர அனுமதிக்கின்றன. இருப்பினும், பெரும்பாலான விமானங்கள் தற்போது வரை பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்கள், OCI அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றன. சுற்றுலா விசாவை அனுமதிக்காத நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல முடியாது, மேலும் சுற்றுலா நடவடிக்கைகளை அனுமதிக்காத நாடுகளுக்குள் நுழைய நீங்கள் சரியான விசாக்களை பெற வேண்டும்.

மேலும் பல நாடுகள் ஏர் பப்பிள் விமான ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுமா?

சர்வதேச விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இந்தியா பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி இத்தாலி, பங்களாதேஷ், கஜகஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா,
உக்ரைன் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைய வாய்ப்புள்ளது.

ஏர் பப்பிள் ஒப்பந்தத்தில் செல்லும் நபர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளதா?

ஆம்., எல்லா நாடுகளும் அணைத்து விதமான விசாக்களையும் அனுமதிக்கவில்லை. உதாரணமாக இந்தியாவில் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் ஏர் பப்பில் ஒப்பந்தத்தின் கீழ், ஆன்லைனில் பதிவு செய்வது அல்லது தூதரகத்தில் பதிவு செய்வது போன்ற நடைமுறைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து விதிமுறைகளும் வழக்கம் போல செயல்படும்.
First published: October 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading