Home /News /automobile /

2023-க்குள் எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்..!

2023-க்குள் எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்..!

காட்சி படம்

காட்சி படம்

1970-களில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்திய கார் சந்தையில்சுமார் 75 சதவீத சந்தை பங்கை கொண்டிருந்தது. இந்நிறுவனம் புகழ்பெற்ற அம்பாசிடர் காரைத் தயாரித்து வந்தது.

நாட்டில் எலெக்ட்ரிக் வாகன துறை முன் எப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் செக்மென்ட்டில் நுழைந்துள்ளன. அந்த வகையில் முன் அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (HM) நிறுவனம், இப்போது நாட்டின் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் டூ வீலர் மார்க்கெட்டை இலக்காக கொண்டு களமிறங்க முடிவு செய்துள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அடுத்த ஆண்டுக்குள் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றுடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து புதிய கூட்டு முயற்சியின் கீழ் நாட்டில் எலெக்ட்ரிக் டூ வீலர் உற்பத்தியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. முதலில் எலெக்ட்ரிக் டூ வீலர் உற்பத்தியில் துவங்கி, பின்னர் எலெக்ட்ரிக் ஃபோர் வீலர் தயாரிக்கவும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக HM நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் இயக்குனர் உத்தம் போஸ் குறிப்பிடுகையில், இரு நிறுவனங்களின் நிதி கண்காணிப்பு இந்த மாதம் தொடங்கும், இந்த செயல்முறை முடிய இரண்டு மாதங்கள் ஆகும். பின் பிறகு கூட்டு முயற்சியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆராய மேலும் ஒரு மாதம் ஆகும் என்றார்.

இதன் பிறகே முதலீடுகளின் கட்டமைப்பு (structuring of investments) குறித்து (முடிவு செய்யப்படும் மற்றும் புதிய நிறுவனம் உருவாக்கப்படும். இவை எல்லாம் நிறைவடைய 2023 பிப்ரவரி ஆகலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நிறுவனத்துடனானன் பார்ட்னர்ஷிப்பில் புதிய நிறுவனம் உருவாக்கப்பட்ட பின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு திட்டம் அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் தொடங்கப்படும் என்று கூறினார். எலெக்ட்ரிக் டூ வீலர் திட்டம் வணிகமயமாக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கு பின், எலெக்ட்ரிக் ஃபோர் வீலர்கள் தயாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரானிக் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் உள்ளிட்ட சில கன்ட்ரோல் சிஸ்டம்கள் மாற்றப்பட வேண்டியிருப்பதால், தங்கள் நிறுவனத்தின் உத்தர்பாரா ஆலையை (Uttarpara plant) புதுப்பிக்க இருப்பதாகவும் கூறுகிறார் உத்தம் போஸ். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்தியாவில் அதன் சொந்த ஃபோர்ஜிங், ஃபவுண்டரி, பெயிண்ட் ஷாப், அசெம்பிளி மற்றும் வெல்டிங் ஷாப் ஆகியவற்றைக் கொண்ட ஒரே அசல் உபகரண உற்பத்தியாளராக (OEM) இருந்தது என்றும் அவர் அடிக்கோடிட்டு காட்டினார். தற்போதைய பணியாளர் எண்ணிக்கை சுமார் 300-ஆக இருப்பதால், புதிய திட்டத்திற்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று போஸ் கூறினார். வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கும் போது, இத்திட்டத்தில் சுமார் 400 பேர் வேலை பெறுவார்கள் என்றார்.

also read : ஆப்டிக்கல் இல்யூஷன் சோதனையில் நீங்கள் உறவில் எவ்வளவு நேர்மையானவர் என்று பாருங்கள்!

1970-களில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்திய கார் சந்தையில்சுமார் 75 சதவீத சந்தை பங்கை கொண்டிருந்தது. இந்நிறுவனம் புகழ்பெற்ற அம்பாசிடர் காரைத் தயாரித்து வந்தது. மாருதி 800 போன்ற மலிவு விலை கார்கள் நாட்டில் அறிமுகமாக தொடங்கியதும், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாசிடர் கொஞ்சம் கொஞ்சமாக சவாலை எதிர்கொண்டது. ‘அம்பாசிடர்’ கார்களுக்கான தேவை அடியோடு இல்லாததால் நிறுவனம் கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆலையை மூடியது, பின் அந்த பிராண்டை பிரெஞ்சு வாகன உற்பத்தியாளர் பியூஜியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றது. அதன் சொகுசு கார் பிராண்டான 'கான்டெஸா'வை எஸ்ஜி மொபிலிட்டிக்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி