ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

EV பேட்டரி பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான காலக்கெடுவை டிசம்பர் வரை நீட்டித்த மத்திய அரசு!

EV பேட்டரி பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான காலக்கெடுவை டிசம்பர் வரை நீட்டித்த மத்திய அரசு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பேட்டரிகளை பாதுகாப்பானதாக மாற்றும் கடுமையான தரநிலைகளை கடைப்பிடிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எரிபொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. எனினும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்துகள் நிகழ்ந்த சம்பவங்களால் மக்களிடையே சிறிய தயக்கம் மற்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Ola Electric, PureEV மற்றும் Okinawa உள்ளிட்ட நிறுவனங்களின் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்துகளை எதிர்கொண்டன. சில உயிரிழப்புகளும் பதிவானது. இந்த தீ விபத்து சம்பவங்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் பேட்டரி மாட்யூல்களில் ஏற்பட்ட பழுதுகள் காரணம் என்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வு குழு பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை உற்பத்தியாளர்கள் பின்பற்ற பரிந்துரைத்தது.

ஆய்வை தொடர்ந்து மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பேட்டரிகளை பாதுகாப்பானதாக மாற்றும் கடுமையான தரநிலைகளை கடைப்பிடிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிட்டு அதற்கு அவகாசமும் அளித்தது. EV பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளின் புதிய தொகுப்பிற்கு இணங்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு அக்டோபர் 1, 2022 காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தற்போது கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

Read More : வாகன காப்பீடு செய்யும்போது இந்த ஆட்-ஆன்கள் மிக முக்கியம் - நிச்சயமாகப் பலன் கொடுக்கும்!

முன்னதாக அக்டோபர் 1-ஆம் தேதி வரை இருந்த காலக்கெடுவை தற்போது டிசம்பர் 1, 2022 வரை நீட்டித்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) கூறி இருப்பதாவது "சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகன பேட்டரி சோதனை தரநிலைகளை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் கோரிய தொழில்துறையினரின் கோரிக்கைகளை அடுத்து, பேட்டரிக்கான தரநிலைகளை கட்டாயமாக நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய EV பேட்டரி பாதுகாப்பு விதிமுறைகள் 2 கட்டங்களாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டம் வரும் டிசம்பர் 1, 2022-ல் தொடங்கும் என்றும் இரண்டாம் கட்டம் மார்ச் 31, 2023 அன்று நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காலக்கெடுவின் மூலம் புதிய பேட்டரி தரநிலைகளின் வெவ்வேறு அம்சங்களை OEM-க்கள் பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிகளை அவசரமாக செயல்படுத்துவது மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று கவலை எழுந்ததது. பேட்டரி பேக்குகளை மறு-வடிவமைப்பதில் நேர நெருக்கடி மற்றும் சில சோதனை செயல்முறைகளில் தெளிவின்மை ஆகியவை மோசமான செயலாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால் தற்போதைய கூடுதல் கால அவகாசம் EV தொழில்துறைக்கு ஒரு நிவாரணமாக உள்ளது.

இந்த புதிய பேட்டரி தரநிலைகளில் கடும் செல்-லெவல் பாதுகாப்பு சோதனைகள், சிறந்த இன்சுலேஷன், பேட்டரி பேக்கில் தனித்தனி செல்கள் போதுமான இடைவெளி, ஒரு கலத்தில் உள்ள வெப்ப ஓட்டம் பேட்டரியில் உள்ள மற்ற செல்களுக்கு பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வெப்பப் பரவல் சோதனைகள், வெப்பச் சம்பவங்களை தடுக்க ஆடியோ-விஷுவல் எச்சரிக்கைகளை அனுப்பக்கூடிய டெம்ப்ரேச்சர் சென்ஸார்ஸ், மற்றும் சிறந்த பேட்டரி மேலாண்மை அமைப்புகள் (BMS) மற்றும் சார்ஜர்கள் உள்ளிட்ட பல அடங்கும். இந்த திருத்தப்பட்ட தரநிலைகள் EV தீ விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகள் அல்லது தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி இருக்கிறது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Electric bike, Electric car, Electricity