Home /News /automobile /

EV : எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

EV : எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்கள்

எலெக்ட்ரிக் வாகனங்கள்

EV electric bikes: எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை நோக்கி முன்னேறிச் செல்ல முயற்சி செய்வது, பூமி வெப்பமடைதல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத மாற்று விஷயங்களை தேட வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புவி வெப்பமடைதல் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், மனித தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய மாற்று மற்றும் சுத்தமான எரிசக்தி மீது உலக நாடுகள் தங்களது கவனத்தை திருப்பியுள்ளன.

உலகம் முழுவதும் இருந்து ஓட்டுமொத்த கச்சா எண்ணெய்யின் பெரும்பகுதி போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் நிலையற்ற தன்மை, அதீத விலை மாறுபாடுகள், சர்வதேச வியாபாரப் போக்கு, எண்ணெய் இறக்குமதியில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்டவை உலக நாடுகளை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்ப வைத்துள்ளன.

இதையும் படிங்க.. இந்தியாவில் மொத்தம் எத்தனை எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

COP26 உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்தியா, 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 30 சதவீத தனியார் பயனர்களின் வாகனங்களை மின்சார வாகனங்களாக (EVகள்) மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாக உறுதிமொழி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன சந்தையில் உலகிலேயே 5வது இடம் வசிக்கும் இந்தியா போன்ற நாட்டிற்கு மிகப்பெரியது ஆகும். ஆனால் இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான புள்ளிவிவரங்களின் படி வாகனங்களின் மொத்த விற்பனையில் EV விற்பனை வெறும் 1.3 சதவீதம் மட்டுமே உள்ளது.

இது எலெக்ட்ரிக் வாகன விற்பனைக்கான ஆரம்ப கட்டம் தான் என்பதால், CEEW-CEF கணிப்பின் படி 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை 206 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க.. 2025 ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ.45,000 வரை அதிகரிக்கலாம் – ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் பெருகி வரும் எலெக்ட்ரிக் வாகன தேவையை கருத்தில் கொண்டு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதலீடு செய்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை ஸ்கோடா அறிவித்துள்ளது. ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம், உலக அளவில் இருசக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமான ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனத்துடன் கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக 3 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

அடுத்ததாக இந்திய வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை 100 சதவீதம் வரை அதிகரிக்க, கடன் உத்திரவாதத்துடன் கூடிய நிதியுதவி, ஸ்டார்ட் அப்களுக்கான திட்டங்கள், வரி தள்ளுபடிகள், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூட 2022 இல் எலெக்ட்ரிக் வாகன துறைக்கான முதலீட்டுத் திட்டங்களில் 14.5 பில்லியன் வரை உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிக்கிறது, பொது மற்றும் தனியார் சார்ஜிங் பாயின்ட்கள், பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் போன்ற வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றன.

எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப்கள், ADB வென்ச்சர்ஸ், இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (IFC) மற்றும் கிரீன் க்ரோத் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற வளர்ச்சி நிதி மற்றும் காலநிலை நிதி நிறுவனங்களிலிருந்து முதலீடுகளை ஈர்த்துள்ளன. இந்தியா முழுவதும் தோராயமாக 500 எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இதில் 63% ஸ்டார்ட்அப்கள் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Automobile, Electric bike, Electric Cars

அடுத்த செய்தி