Auto Expo 2023 என்ற பெயரில் கார் உற்பத்தியாளர்களுக்கான கண்காட்சி நொய்டாவில் நடைபெற்றது. ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்களான மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, மினி வோஃல்க்ஸ்வேகன், ஸ்கோடா, ஜக்குவார், லேண்ட் ரோவர் போன்றவை இந்த கண்காட்சியை தவறவிட்டன.
அதே சமயம், அவர்களது சர்வதேச அளவிலான விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்திய சந்தை மீதான கவனத்தை அதிகரித்துள்ளன. ப்ரீமியம் மற்றும் சொகுசு வகையைச் சேர்ந்த வோஃல்க்ஸ்வேகன், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றை அதிகரித்துள்ளன என்பது கடந்த சில ஆண்டுகளின் தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் உலக அளவிலான கார் விற்பனையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்தது. அதுவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கார் விற்பனை சந்தையில் இந்தியா 5ஆம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பியா உள்பட சர்வதேச கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் விற்பனையை அதிகரித்து, அந்நிறுவனங்களின் வருவாயை பெருக்கிக் கொண்டன என்றாலும் கூட, இங்கு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பின் அடிப்படையில் அவை பின்தங்கி உள்ளன. இதனால் தான் அந்நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியின்மை போன்ற காரணங்களால் பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் கார் விற்பனை மந்தமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் கார் விற்பனை நிலையான அளவில் அதிகரித்து வருவதால், அந்நிறுவனங்கள் இங்கு விற்பனைக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
விற்பனை அதிகரிப்பு
செக் குடியரசு நாட்டின் நிறுவனமான வோஃல்க்ஸ்வேகன் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ஏறத்தாழ 54,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேம்பட்ட வசதிகள், திருத்தி அமைக்கப்பட்ட டிசைன் ஆகியவற்றுடன் கூடிய புது மாடல்களை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருக்கிறது.
Also Read : மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் பயன்தராது : கேடிஎம் தலைவர் அதிர்ச்சி தகவல்
சொகுசு கார்கள்:
சொகுசு கார்கள் வரிசையில் மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களுக்கு இந்திய சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், அந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையானது முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்கக் கூடியதாக இல்லை.
அதே சமயம், புதுப்புது மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனம் அண்மையில் ஐ7 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பென்ஸ் நிறுவனத்தின் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் மாடலுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Audi, BMW car, Jaguar, Luxurious cars, Mercedes benz, Skoda, Volkswagen