இந்திய அளவிலான மோட்டார் வாகன கண்காட்சி நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின்போது யூனிக் 7 (Euniq 7) என்ற ஹைட்ரஜனால் இயங்கும் எரிபொருள் செல் ஒன்றை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய எரிபொருள் வாகனக் கொள்கை திட்டத்தின் கீழ் இந்த ஹைட்ரஜன் வாகனத்தை எம்ஜி மோட்டார் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. 3ஆம் தலைமுறை ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
இந்த 3ஆம் தலைமுறை தொழில்நுட்பத்திற்கு Prome P390 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிக ஆற்றல் மற்றும் செயல்திறன் கொண்டதாக இந்த தொழில்நுட்பம் அமையும் என்று எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
நீராவி மட்டுமே வெளிவரும்:
சாதாரணமாக நாம் பயன்படுத்துகின்ற பெட்ரோல், டீசல் வாகனங்களில் புகை வெளித்தள்ளப்படுவதை பார்த்திருப்போம். அந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தும் யூனிக் 7 வாகனத்தில் வெறும் நீராவி மட்டும்தான் வெளிவருமாம். இது ஒரு காற்று சுத்திகரிப்பான் போல செயல்படும் என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது, ஒரு மணி நேர பயணத்தில் 150 பெரியவர்கள் சுவாசிக்கும் அளவிலான காற்றை இது சுத்திகரிப்பு செய்யுமாம்.
இந்த காரில் ஏடிஏஎஸ் மற்றும் ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. Prome P390 எரிபொருள் கட்டமைப்பானது 92 kW பவர் திறனுடன் வருகிறது என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக, மிக உயர் தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளுக்கான சௌகரியம், புகையில்லா போக்குவரத்து, எரிபொருள் செலவு குறைப்பு மற்றும் குறைவான பராமரிப்பு தேவை போன்ற பல சிறப்புகளை கொண்டதாக இந்த கார் இருக்கும்.
நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்ப கட்டமைப்புகள் வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. இது வாகனத்தை உடனடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இந்த தொழில்நுட்பத்தை பயணிகளுக்கான கார், மாநகர பேருந்துகள், இலகுரக லாரிகள் மற்றும் கனரக லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும் என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவிக்கிறது.
Also Read : மாருதி நிறுவன கார்களின் விலை உயர்ந்தது..!
தட்பவெட்ப சூழலுக்கு உகந்தது:
ஹைட்ரஜன் எரிபொருள் கட்டமைப்பானது 95 டிகிரி வரையிலான வெப்பநிலையிலும், குறைந்தபட்சமாக மைனஸ் 30 டிகிரி குளிர்நிலையிலும் செயலாற்றக் கூடியதாகும். இதுகுறித்து எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ராஜீவ் சாபா கூறுகையில், “தடையில்லா போக்குவரத்து தீர்வுகளை அளிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் நாங்கள் களமிறங்கியுள்ளோம்’’ என்றார். முன்னதாக எம்ஜி4 மற்றும் இஹெச்எஸ் என்ற எலெக்ட்ரிக் வாகனங்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 11ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதில் இரண்டாவது கார் ஹைப்ரிட் வகையைச் சேர்ந்தது ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Cars