Home /News /automobile /

ஜப்பான் மற்றும் நேபாளத்தில் இ-பைக்குகளை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்!

ஜப்பான் மற்றும் நேபாளத்தில் இ-பைக்குகளை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்!

EMotorad

EMotorad

எங்கள் நிறுவனத்தின் இந்திய வெப்சைட்டிற்கு நேபாளத்தில் இருந்து பலர் தொடர்பு கொண்டு இ-பைக்குள் பற்றி விசாரித்தனர். எனவே இந்தியாவில் உள்ள அதே மாடல்களை நேபாளத்திலும் அறிமுகப்படுத்தினோம்.

இந்திய பிரீமியம் இ-பைக் நிறுவனமான EMotorad (EM), சமீபத்தில் ஜப்பான் மற்றும் நேபாளத்தில் தனது முதல் வெளிநாட்டு செயல்பாடுகளை தொடங்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. உள்நாட்டு ப்ரீமியம் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரான EMotorad, தற்போது ஜப்பான் மற்றும் நேபாளத்தில் அதன் எலெக்ட்ரிக்-பைக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் EMotorad நிறுவனம் தன் எல்லையை சர்வதேச அளவில் விரிவுபடுத்தியுள்ளது. இந்நிறுவனம் முன்னதாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்திய பின் அடுத்ததாக ஐக்கிய அரபு எமிரேட் மார்க்கெட்டில் நுழைந்தது.

இந்நிலையில் ஜப்பான் மற்றும் நேபாளத்தில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய மற்றும் அமீரக வாடிக்கையாளர்கள் மத்தியில் எங்கள் தயாரிப்புகளை வெளியிட்ட பிறகு, எங்களது சர்வதேச அளவிலான EV தயாரிப்புகளை உலக அளவில் காட்சிப்படுத்த உற்சாகமாக இருக்கிறோம். இதன் அடிப்படையில் தற்போது ஜப்பான் மற்றும் நேபாளத்தில் எங்கள் இ-பைக்குகளை (e-bikes) அறிமுகப்படுத்தியுள்ளோம்," என்று தெரிவித்துள்ளது.

EMotorad-ன் நிறுவனர் ரஜிப் கங்கோபாத்யா (Rajib Gangopadhya) பேசுகையில், "எங்கள் நிறுவனத்தின் இந்திய வெப்சைட்டிற்கு நேபாளத்தில் இருந்து பலர் தொடர்பு கொண்டு இ-பைக்குள் பற்றி விசாரித்தனர். எனவே இந்தியாவில் உள்ள அதே மாடல்களை நேபாளத்திலும் அறிமுகப்படுத்தினோம். அதே போல ஜப்பானில் தற்போது நாங்கள் 3 மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளோம், விரைவில் நான்காவது மாடலை அந்த நாட்டில் அறிமுகப்படுத்துவோம். முதலில் ஜப்பான் எங்களுக்கு அணுகுவதற்கே கடினமான சந்தையாக இருந்தது. ஆனால் இப்போது ஜப்பான் EMotorad-ன் சர்வதேச தரத்திலான தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு நல்ல சந்தையாக உள்ளது" என் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:  மைக்ரோசாப்ட் பெயரில் பகீர் மோசடி.. பைரேட்டட் வெர்ஷன் பயன்படுத்துகிறீர்களா? உஷார்

 

EMotorad நிறுவனம் அதன் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் பைக்குகளான T-Rex மற்றும் EMX ஆகிய 2 மாடல்களை நேபாளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் தனது Xplorer, Glider மற்றும் Dolphin ஆகிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை களமிறக்கி இருக்கிறது. ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேற்காணும் 3 மாடல்கள் அந்த நாட்டின் மக்கள்தொகை மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை மனதில் கொண்டு ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்டு உள்ளதாக EMotorad நிறுவனம் கூறுகிறது.

இதையும் படிங்க:  கணவரின் பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி - செக்ஸ் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்திய கணவருக்கு நேர்ந்த சோகம்..

இதனிடையே நேபாளத்தில் EMotorad இ-பைக்குகளின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான் சந்திர பிரகாஷ் ஸ்ரேஸ்தா கூறுகையில், "இந்த EV பிரிவில் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ச்சியான ஸ்டாக், நியாயமான விலை, உதிரிபாகங்கள் இருப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைக்கு பிராண்டிங் ஆதரவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குகிறது EMotorad. எனவே நேபாளத்திற்காக இப்படிப்பட்ட பிராண்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறி இருக்கிறார். 2020-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட EMotorad நிறுவனம் தற்போது 8 பைக் மாடல்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Automobile, Electric bike

அடுத்த செய்தி