இறக்குமதி வரியால் இந்தியாவில் டெஸ்லா விலை உயரும் - எலான் மஸ்க்

இதுவே 27 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கார் என்றால் அதற்கு இந்தியாவில் 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: August 2, 2019, 2:05 PM IST
இறக்குமதி வரியால் இந்தியாவில் டெஸ்லா விலை உயரும் - எலான் மஸ்க்
டெஸ்லா
Web Desk | news18
Updated: August 2, 2019, 2:05 PM IST
இந்தியாவில் டெஸ்லா அறிமுகமாகும் போது இறக்குமதி வரியால் விலை உயர்வாகவே இருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே டெஸ்லா கார் இந்தியாவில் இறக்குமதியாகும் என்ற அறிவிப்பு தொடர்ந்துகொண்டேதான் உள்ளது. சமீபத்தில் கூட நிறுவனர் எலான் மஸ்க் இந்த ஆண்டு அல்லது 2020-ல் நிச்சயமாக டெஸ்லா இந்தியாவுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் மீண்டும் எலான் மஸ்க் இடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தவர், “இந்தியாவில் டெஸ்லா நிச்சயமாகக் களமிறக்கப்படும். ஆனால், இதற்கான இறக்குமதி இந்தியாவில் அதிகம் எனக் கூறுகின்றனர். இதனால், டெஸ்லா விலை உயர்ந்து பலராலும் வாங்க முடியாத அளவுக்கு ஆகும் சூழலே உள்ளது” என்றார்.
Loading...சர்வதேச அளவில் டெஸ்லா பட்ஜெட் ரக சொகுசு கார்கள் பட்டியலிலேயே உள்ளது. 20 முதல் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெஸ்லா மாடல் 3 வந்தால் அதற்கு 60 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் இந்தியாவில் கடுமையாக விலை உயரும். இதுவே 27 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கார் என்றால் அதற்கு இந்தியாவில் 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

மேலும் பார்க்க: அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்
First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...