3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் மலிவாய் இருக்கும்..! நிதி ஆயோக் சிஇஓ கணிப்பு

’சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையச் சந்தையாக இந்தியா வளரும்’.

3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் மலிவாய் இருக்கும்..! நிதி ஆயோக் சிஇஓ கணிப்பு
நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கண்ட்
  • News18
  • Last Updated: February 3, 2020, 5:48 PM IST
  • Share this:
எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களைவிட எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அடுத்த மூன்று ஆண்டுகளில் மலிவாய் ஆகும் என நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.

2020 உலக வளர்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டு நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கண்ட் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “அடுத்த மூன்று ஆண்டுகளில் எரிபொருள் வாகனங்களைவிட எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் மலிவாய் கிடைக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரிகளின் விலை மிகவும் குறையும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கு இந்திய அரசு அளிக்கும் ஆதரவால் விரைவில் உள்நாட்டிலேயே மிகப்பெரும் அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி நடைபெறும். சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையச் சந்தையாக இந்தியா வளரும்.


இத்தகைய சூழலில் நம்முன் இரண்டு சவால்கள் உள்ளன. மக்களின் போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்ற நகர்ப்புற கட்டமைப்பு முக்கியத் தேவையாக உள்ளது. இரண்டாவதாக, சர்வதேச உற்பத்தியாளர்கள் மத்தியில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான ஸ்திரத்தன்மை தேவைப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளின் விலை 51 சதவிகிதம் வரையில் குறையப் போகிறது” என்றார்.

மேலும் பார்க்க: இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான எஸ்யூவி பட்டம்... தட்டிச்சென்ற மஹிந்திராவின் கார்!
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading