இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக தொழில்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினருக்கு ரூ.3 லட்சம் கோடி அளவில் வர்த்தகம் கிடைக்கும் என்று CRISIL (கிரிசில்) என்ற தொழில்துறை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சாதன உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி ஆகியவற்றில் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கும், வாகன விற்பனைத்துறையில் ரூ.90,000 கோடி அளவுக்கும் வர்த்தம் நடைபெறும் என்றும், எஞ்சிய தொகைக்கான வர்த்தகம் எனது வாகன பயன்பாடு மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இருக்கும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
முன்னுரிமை வாய்ப்பு
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்க உள்ளது. எண்ணற்ற மக்கள், புதைவடிவ எரிபொருள் வாகன பயன்பாட்டில் இருந்து, சுற்றுசூழலுக்கு மாசற்ற எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
மத்திய அரசின், Parivahan இணையதளத்தில் உள்ள பதிவுகளின்படி, கடந்த 2022ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் 3 சக்கர வாகனங்களின் பதிவு என்பது 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் பதிவு 2 சதவீத அளவிலும், எலெக்ட்ரிக் பேருந்துகளின் பதிவு 4 சதவீத அளவிலும் அதிகரித்துள்ளது.
பெரும் மாநகரங்களில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களும் கூட அரசின் மானியங்கள் மற்றும் இதர நிதிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
மானியங்களால் பலன்
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் விலை உயர்வு காரணமாக பலரும், அதுபோன்ற வாகனங்களைக் கைவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர். குறிப்பாக, மத்திய அரசு செயல்படுத்தும், எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகன துரித உற்பத்தி மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் (FAME) கொள்கையின் கீழ் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை, மானியங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆலைகளை நிறுவி, தொழில் விரிவாக்கம் செய்து வருகின்றன.
Also read... ரூ.60 ஆயிரம் முன்பணம் செலுத்தினாலே போதும்... Tata Punch SUV கார் வாங்க சரியான நேரம்!
இதேபோன்று, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கான முதலீடுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பல்வேறு மாநில அரசுகளும் உறுதி அளித்துள்ளன.
சராசரியாக இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனம் ஆண்டுதோறும் 6,000 கி.மீ. அளவுக்கும், 3 சக்கர எலெக்ட்ரிக் வாகனம் ஆண்டுதோறும் ரூ.20,000 கி.மீ. அளவுக்கும் பயணிக்கின்றன என்ற நிலையிலும் கூட, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அவை போட்டியை ஏற்படுத்தி வருகின்றன என்று கிரிசில் அமைப்பு தெரிவிக்கிறது.
புதிய டிரண்ட்
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிய மாடல்கள் மற்றும் பல புதிய டிரெண்டுகள் ஆகியவை அதிகரிக்க உள்ளன என்று கிரிசில் அமைப்பு கூறுகிறது. உதாரணத்திற்கு, பேட்டரிகளுக்கு சார்ஜிங் செய்வதற்கான பொது சார்ஜிங் நிலையங்கள் உருவாகி வருகின்றன. இதனால், வாகன பயன்பாடு அதிகரிக்கவும், மைலேஜ் குறித்து கவலை கொள்ளாமல் அதிக தொலைவு பயனிக்கவும் வழிவகை ஏற்படுகிறது என்று பிரிசில் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Electric car