எலெக்ட்ரிக் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கான நற்செய்தி இதோ...

2015-ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் எண்ணெய் வள இறக்குமதியைக் குறைக்கவும் இந்தியா முயற்சித்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கான நற்செய்தி இதோ...
நிதின் கட்காரி
  • News18
  • Last Updated: June 20, 2019, 12:19 PM IST
  • Share this:
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

சாலை வரி விலக்கு தொடர்பாக அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், “சாலை வரி விலக்கு அனைத்து ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பொருந்தும். இரு சக்கரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்தியாவில் பதிவாகும் போது சாலை வரி கட்டத் தேவையில்லை” என்றார்.

சமீபத்தில்தான், 2030-ம் ஆண்டு முதல் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என்ற திட்டத்தை வெளிப்படுத்தினார் நிதின் கட்காரி. மேலும், வருகிற 2023-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்.


மேலும் பார்க்க: 2020 முதல் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே!- டொயோட்டா அதிரடி!

இதேபோல், 2025-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு வரும். குறிப்பாக 150cc-க்கு குறைவான பைக்குகள் மட்டுமே விற்பனைக்கு வரும்.

எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்துவதன் மூலம் நாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு முயல்வதாகத் தெரிவித்துள்ளது.2015-ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் எண்ணெய் வள இறக்குமதியைக் குறைக்கவும் இந்தியா முயற்சித்து வருகிறது.மேலும் பார்க்க: சென்னை, மதுரை, கோவையில் அரசு இ-பேருந்துகள்- போக்குவரத்துத்துறை அமைச்சர்

நடிகர் ராமராஜனின் கதை 
First published: June 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்