ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

2035-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு எவ்வளவு இருக்கும்.? வெளியான தகவல்

2035-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு எவ்வளவு இருக்கும்.? வெளியான தகவல்

காட்சி படம்

காட்சி படம்

எரிபொருட்களின் விலை உச்சத்தை தொட்டதால் மெது மெதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

எரிபொருட்களின் விலை உச்சத்தை தொட்டதால் மெது மெதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகளவில் மொத்த வாகன விற்பனையில் EV-க்கள் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டுள்ளன. எனினும் வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் மொத்த வாகன விற்பனையில் பாதிக்கும் மேல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கன்சல்டன்சி நிறுவனமான AlixPartners அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் உலகளவில் வரும் 2028-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகன விற்பனை 33 சதவீதம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் EV விற்பனை 54 சதவீதம் உயரும் என்றும் AlixPartners நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு பெரும்பாலான முக்கிய சந்தைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டு வருவதே முக்கிய காரணமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

உலகளாவிய அளவில் இந்த தேவை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும், EV-க்களின் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தன்மை அவற்றின் விற்பனைக்கு ஒரு வலுவான காரணியாக இருந்தாலும், இந்த துறையில் செய்யப்படும் அதிக முதலீடுகளும் EV-க்களின் விற்பனை அதிகரிப்பை தவிர்க்க முடியாததாக ஆக்குவதாக அறிக்கை கூறுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு உலகளாவிய விற்பனையில் EV-க்கள் 8 சதவீதத்திற்கும் குறைவாகவும், 2022 முதல் காலாண்டில் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் இருந்தன. தேவை அதிகரித்து வரும் நிலையில் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் 2022-2026 வரை EV-க்கள் மற்றும் பேட்டரிகளில் குறைந்தது $526 பில்லியன் முதலீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AlixPartners நிறுவனத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான மார்க் வேக்ஃபீல்டின் கூற்றுப்படி, இந்த அதிக முதலீடுகள் இப்போது EV வளர்ச்சியை தவிர்க்க முடியாததாக மாற்றியுள்ளதாக கூறி இருக்கிறார்.

உள் எரிப்பு இயந்திரம் (ICE - Internal Combustion Engines) வாகனங்களில் இருந்து EV-க்களுக்கு மாறும்போது வாகன தொழில் துறை இன்னும் பொருளாதார மற்றும் விநியோக சங்கிலி சவால்களை எதிர் கொண்டு வருவதாகவும் மார்க் வேக்ஃபீல்ட் கூறி இருக்கிறார். அதே நேரம் சில நிறுவனங்கள் தங்கள் பிசினஸை ICE மற்றும் EV என இரண்டாக பிரிப்பதன் மூலம் பயனடையும் என்றார்.

EV-க்களுக்கான மூலப்பொருட்களின் விலை ICE-க்களை விட 2 மடங்கு அதிகமாகும். ICE-யிலிருந்து EV-க்களுக்கான மாற்றத்திற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கும், சப்ளையர்களுக்கும் 2030-ஆம் ஆண்டளவில் மொத்தம் சுமார்70 பில்லியன் டாலர் செலவாகும் என்று வாகன நடைமுறையின் இணைத் தலைவர் எல்மர் கேட்ஸ் கூறுகிறார். இதனிடையே

Also see... Renault: இந்த மூன்று மாடல்களுக்கு தள்ளுபடியை அள்ளிவீசும் ரெனால்ட்

இதனிடையே சப்ளை தடைகள் 2024 வரை தொடரலாம் என்று AlixPartners கூறி இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு மொத்த உலகளாவிய வாகன விற்பனை 79 மில்லியன் யூனிட்டுகளாக குறைய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மொத்த வாகன விற்பனை நடப்பாண்டில் 16 மில்லியனாக உயரும் என்றும், 2024-ல் 17.5 மில்லியனாக உயரும் என்றும் ஆனால் 2025-2026-ல் குறையும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Electric car