Home /News /automobile /

மின்சார வாகனங்களை விரைவில் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்! இதோ அதற்கான புதிய கண்டுபிடிப்பு! 

மின்சார வாகனங்களை விரைவில் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்! இதோ அதற்கான புதிய கண்டுபிடிப்பு! 

Electric Vehicles | மீரட் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (எம்ஐஇடி) என்கிற கல்வி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் தான் இதற்கான மாற்று கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளனர். இவர்களின், இந்த முயற்சியினால் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களைப் போலவே, இப்போது மின்சார இப்போது மின்சார வாகனங்களும் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும்.

மேலும் படிக்கவும் ...
கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் விற்பனையானது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் வாகனங்களை பயன்படுத்தி வருவதால், அதற்கான உற்பத்தி அளவும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. இருப்பினும் இது போன்று அதிக அளவில் வாகனங்களை பயன்படுத்தி வருவதால் சுற்றுசூழல் மாசுபாடு போன்ற பாதிப்புகள் பெருகி வரக்கூடும். எனவே இதற்கு மாறாக பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

மக்களின் இந்த தேவைக்கேற்ப இன்று பல விதமான எலெக்ட்ரிக் வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதே போன்று, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டு அதிக அளவிலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பெட்ரோல், டீசலுக்கு பதிலாக இந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்து விட்டால், ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம் நம்மால் பயணம் செய்ய முடியும். அதன் பிறகு நாம் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இது போன்ற சிக்கலை நீக்க இரண்டு கல்லூரி மாணவர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளனர்.

மீரட் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (எம்ஐஇடி) என்கிற கல்வி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள்தான் இதற்கான மாற்று கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளனர். இவர்களின், இந்த முயற்சியினால் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களைப் போலவே, இப்போது மின்சார வாகனங்களும் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும். மாணவர்கள் சாகர் குமார் மற்றும் ரோஹித் ராஜ்பார் ஆகியோரின் வயர்லெஸ் எலக்ட்ரிக் சார்ஜிங் சிஸ்டத்தின் வசதியால், மின்சார வாகனங்கள் ஓட்டும் போது சார்ஜ் செய்து கொள்ளலாம். குறைந்த அளவிலான சார்ஜிங் பாயின்ட்கள் சாலைகளில் இருப்பதால், வாகனங்கள் நீண்ட தூரம் செல்ல முடிவதில்லை. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இதற்கு சாலையோரங்களில் டவர்கள் அமைத்து காரில் ரிசீவர் வைக்கப்படலாம் என்று மாணவர் சாகர் கூறினார். டவரின் எல்லைக்குள் கார் வந்தவுடன், அந்த காரின் பேட்டரி சார்ஜ் ஆக ஆரம்பிக்கும். ரிசீவரின் வரம்பு மிகவும் குறைவாக இருந்தாலும், அதன் வேகத்தை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வரும். இது வயர்லெஸ் மொபைல் சார்ஜர் போன்ற அமைப்பை கொண்டதாகும் என்று குறிப்பிடுகின்றனர். ரூ.20,000 நிதியுதவி வழங்கிய நிதி ஆயோக்கிற்கு இவர்களின் இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். "வயர்லெஸ் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் சிஸ்டம் பற்றிய யோசனையை நாங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே யோசித்து வைத்திருந்தோம். ஆனால் எந்தத் தரப்பிலிருந்தும் எங்களுக்கு உதவி கிடைக்காததால் சிரமங்களை எதிர்கொண்டோம்" என்று ரோஹித் கூறினார். ஆனால் நாங்கள் அடல் கமியூனிட்டி இனோவேஷன் மையத்தை தொடர்பு கொண்டபோது எங்கள் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இதற்கான ஒரு முன்மாதிரியை தயாரிப்பதற்கான நிதியும் ஆய்வகமும் அவர்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்தது. இதன் காரணமாக பணிகள் எளிதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறினார்கள்.

Also Read... மின்சார வாகனம் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஓர் ஹேப்பியான தகவல்

எம்ஐஇடி கல்வி நிலையத்தின் துணைத் தலைவர் புனித் அகர்வால் இவர்களின் கண்டுபிடிப்பு குறித்து கூறியதாவது, “எங்கள் கல்லூரியில் அடல் கமியூனிட்டி இனோவேஷன் மையம் உள்ளது, அங்கு மாணவர்கள் புதுமையான விஷயங்களை உருவாக்க முடியும். அவர்களின் யோசனைகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சிக்கிறோம்." என்று தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Car, Electric car

அடுத்த செய்தி