முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / கடந்த நிதியாண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மும்மடங்கு அதிகரிப்பு..

கடந்த நிதியாண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மும்மடங்கு அதிகரிப்பு..

காட்சி படம்

காட்சி படம்

Electric Vehicle : 2021 - 2022 நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்து 4,29,217 எல்க்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாடு முற்றிலுமாக இல்லை என்பதும், பெருகி வரும் எரிபொருள் விலைக்கு மத்தியில், நியாயமான செலவில் பயணம் செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது என்ற நிலையிலும், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை என்பது வேகமாகப் பெருகி வருகிறது. குறிப்பாக, 2021 - 2022 நிதியாண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மும்மடங்கு பெருகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகன டீலர்களுக்கான அமைப்பாக செயல்படும் FADA அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2020 -2021 நிதியாண்டில் 1,34,821 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நிறைவு பெற்ற 2021 - 2022 நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்து 4,29,217 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 - 2020 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1,68,300 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பாசஞ்சர் வாகன விற்பனை :

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021 நிதியாண்டில் எலெக்ட்ரிக் பாசஞ்சர் வாகனங்களின் விற்பனை 4,984ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இது மூன்று மடங்கு அதிகரித்து 17,802 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. உள்நாட்டு மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இந்தப் பிரிவில் முன்னணியில் இருக்கிறது. சுமார் 15,198 வாகனங்களின் விற்பனையுடன், மார்க்கெட்டில் 85.37 சதவீத பங்களிப்பை அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2020 - 21 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 3,523 ஆக இருந்தது.

கடந்த நிதியாண்டில், விற்பனையில் இரண்டாம் இடத்தில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வந்துள்ளது. அந்த நிறுவனம் சார்பில் 2,045 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020 -21 நிதியாண்டில் இந்த நிறுவனம் 1,115 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. விற்பனை பட்டியலில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் (!56 வாகனங்கள்) மூன்றாம் இடத்திலும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (128 வாகனங்கள்) நான்காம் இடத்திலும் உள்ளன.

also read : இந்தியாவில் தீப்பிடிக்காத Fireproof பேட்டரிகளை அறிமுகப்படுத்த தயார் - கோமகி நிறுவனம்

இரு சக்கர வாகன விற்பனை :

கடந்த 2020 - 2021 நிதியாண்டில் 41,046 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இது 5 மடங்கு அதிகரித்து மொத்தம் 2,31,338 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகன விற்பனையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. சந்தையில் 28.23 சதவீத பங்களிப்புடன் 65,303 வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

also read : இனி இந்த பரிசோதனை கட்டாயம்... வாகன உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு..

இதைத் தொடர்ந்து, 46,447 வாகனங்களின் விற்பனையுடன் ஒகினவா ஆட்டோடெக் இரண்டாம் இடத்திலும், 24,648 வாகன விற்பனையுடன் ஆம்பையர் நிறுவனம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஹீரோ மோட்டார் கேப் நிறுவனம் சார்பில் 19,971 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனம் பட்டியலில் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டில் மொத்தம் உள்ள 1,605 மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து திரட்டப்பட்ட டேட்டாக்கள் அடிப்படையில், இந்தப் பட்டியலை FADA வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் கமர்ஷியல் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 2,203ஆக உள்ளது.

First published:

Tags: Electric bike, Electric car