• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Electric Vehicle: தெலங்கானாவில் எலக்டிரிக் கார் உற்பத்தி - ரூ. 2100 கோடி டிரிட்டன் நிறுவனம் முதலீடு!

Electric Vehicle: தெலங்கானாவில் எலக்டிரிக் கார் உற்பத்தி - ரூ. 2100 கோடி டிரிட்டன் நிறுவனம் முதலீடு!

டிரிட்டன்

டிரிட்டன்

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பெட்ரோல், டீசல் கார்களை படிப்படியாக குறைத்து எலக்டிரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

  • Share this:
2100 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்டிரிக் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தெலங்கானா அரசுடன் டிரிட்டன் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பெட்ரோல், டீசல் கார்களை படிப்படியாக குறைத்து எலக்டிரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக முன்னணி கார் நிறுவனங்கள் எலக்டிரிக் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளன. உலகிலேயே எலக்டிரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெஸ்லா நிறுவனமும் விரைவில் இந்தியாவில் எலக்டிரிக் கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், டிரிட்டன் நிறுவனம் தெலங்கானா மாநிலத்தில் எலக்டிரிக் கார் உறபத்தி தொழிற்சாலையை 2100 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் டிரிட்டன் நிறுவனத்துக்கும், தெலங்கான அரசுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. தெலங்கானா ஐ.டி மற்றும் தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் கே.டி ராவ் முன்னிலையில், டிரிட்டன் நிறுவனத்தின் நிறுவனர் ஹிமான்ஷூ படேல், நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஜெயரஞ்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சாகிர்பாத்தில் உள்ள நிமிஸ் (NIMZ) என்ற இடத்தில் டிரிட்டன் நிறுவனத்தின் எலக்டிரிக் வாகனங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான நிலத்தை மாநில அரசு அந்த நிறுவனக்கு வழங்குகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 50, 000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள டிரிட்டன் நிறுவனம், 25 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளது. செமி டிரக்ஸ், செடான், உயர்தர எஸ்.யூ.வி மற்றும் ரிக்ஷா மின்சார வாகனங்கள் அங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இது குறித்து பேசிய அம்மாநில தொழில்நிறுவனத்துறை அமைச்சர் கே.டி.ராவ், தெலங்கானாவில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க முன்வந்த டிரிட்டன் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார். எலக்டிரிக் வாகனங்கள் உற்பத்திக்கு தேவையான தகுந்த இடம் மற்றும் சூழலை உருவாக்கிக் கொடுப்பதில் தெலங்கானா ஏற்ற இடமாக இருப்பதாகவும், டிரிட்டன் நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

நிலத்தை கையக்கப்படுத்துவது முதல் தொழிற்சாலையை தொடங்குவதற்கு தேவையான அனுமதிகளை பெற்றுத் தருவது வரை அந்த நிறுவனத்துக்கு தெலங்கானா அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் கே.டி ராவ் உறுதியளித்துள்ளார். TSIIC வழிகாட்டுதல்களின்படி, இதுபோன்ற மெகா திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு போட்டித் தன்மையை உருவாக்கும் வகையில் டிரிட்டன் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் இருக்கும் என, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.

Also read... Tesla: சீனாவில் சொந்த சோலார் சார்ஜிங் ஸ்டேஷன் - டெஸ்லாவின் அடுத்த அதிரடி!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, புகை உள்ளிட்ட மாசுபாட்டை குறைக்க உதவும் மின்சார வாகனங்களை தங்கள் நிறுவனம் சிறந்த தரத்தில் தயாரிக்க உள்ளதாக கூறிய அவர், இருச்சக்கர வாகனம், கார், பஸ், ரிக்ஷா உள்ளிட்ட வாகனங்களும் டிரிட்டனில் தயாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், மின்சார வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதிலும் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: