Home /News /automobile /

டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்த குறைந்த ஆற்றல் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாகனப் பதிவு மற்றும் காப்பீடு கூட பெறவேண்டிய அவசியம் இல்லை.

  • Trending Desk
  • 4 minute read
  • Last Updated :
இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும், ஆனால் உங்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லையா? கவலைப்பட வேண்டாம். இந்தியாவில் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய வாகனங்களும் சில உள்ளன. ஆம், சில மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இந்த ஸ்கூட்டர்களில் அதிக ஆற்றல் கொண்ட மோட்டார்கள் மற்றும் அதிக வேகம் இருக்காது. மேலும், இந்த குறைந்த ஆற்றல் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாகனப் பதிவு மற்றும் காப்பீடு கூட பெறவேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் உங்களுக்கு சில செலவுகள் மிச்சமாகும். எனவே, இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் நீங்கள் ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை பின்வருமாறு காண்போம்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

1. ஹீரோ எலக்ட்ரிக் பிளாஷ் ஈ2- Hero Electric Flash E2 (விலை: ரூ. 49,999)

Hero's Electric Flash E2 எலக்ட்ரிக் வாகனம், இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். தோற்றத்தை பொறுத்தவரை இது வழக்கமான பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்களை போலவே இருக்கும். Hero Electric Flash E2 ஆனது 48-வோல்ட் 28Ah லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்கும் ஹப்-மவுண்டட் 250-வாட் மின்சார மோட்டாருடன் வருகிறது. மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும். Flash E2-வை முழுமையாக சார்ஜ் செய்ய 4-5 மணிநேரம் ஆகும். மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 65 கிமீ வரை செல்லும். ஹீரோ எலக்ட்ரிக் லித்தியம்-அயன் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்கள் ஆகும். அவற்றின் பேட்டரிக்கு 5 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது.

2. லோஹியா ஓமா ஸ்டார் லி - Lohia Oma Star Li (விலை: ரூ. 51,750 எக்ஸ்-ஷோரூம்)

லோஹியா ஓமா ஸ்டார் லி என்பது இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் நீங்கள் ஓட்டக்கூடிய மலிவான மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இந்த மின்சார ஸ்கூட்டரில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், புதுப்பிக்கப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் 16-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன. மின்சார ஸ்கூட்டர் ஃபையெரி ரெட், மாச்சோ பிளாக், ஸ்பிரிட்டட் கிரே & ஒயிட் ஆகிய நான்கு வண்ணங்களில் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், லோஹியா ஓமா ஸ்டார் லி 60 கிமீ தூரம் ஓட்டும் வசதியை வழங்குகிறது. Oma Star Li இன் 20Ah பேட்டரியை சார்ஜ் செய்ய 3 மணிநேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் 1 ஆண்டு உத்தரவாதத்துடன் 12,000 கி.மீ. வரம்பை வழங்குகிறது.

ALSO READ |  உலக வாகன துறையில் 2022-ல் ஆதிக்கம் செலுத்த போகும் டாப் ட்ரெண்ட்ஸ்கள் இங்கே..

3. ஆம்பியர் ரியோ எலைட் -Ampere Reo Elite (விலை: ரூ. 43,000 )

ஆம்பியர் ரியோ எலைட் ஒரு ஏப்ரான் பொருத்தப்பட்ட ஹெட்லேம்புடன் வருகிறது. இது ஹோண்டா டியோ ஸ்கூட்டரைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிஜிட்டல் கன்சோலையும், பயணத்தின்போது உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய USB போர்ட்டையும் வழங்குகிறது. இதன் 48-வோல்ட் 24Ah லெட்-ஆசிட் பேட்டரி நெடுஞ்சாலையில் 60 கிமீ வரம்பையும் மற்றும் நகரத்தில் 55 கிமீ வேக வரம்பை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆம்பியர் ரியோ எலைட் நான்கு வண்ணங்களில் வருகிறது. அவை பளபளப்பான கருப்பு, பளபளப்பான வெள்ளை, பளபளப்பான சிவப்பு, பளபளப்பான நீலம் ஆகியவை ஆகும். ஆம்பியர் பேட்டரிக்கு 1 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது.

4. ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் எல்எக்ஸ் - Hero Electric Flash LX (விலை: ரூ. 56,940)

Hero Electric Flash LX எலக்ட்ரிக் வாகனத்தின் 250W BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும். ஃப்ளாஷ் LA எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக்களுடன் அண்டர்போன் சேஸ்ஸுடன் வருகிறது. இரண்டு முனைகளிலும் டிரம் பிரேக்குகளுடன் 12-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. ஃப்ளாஷ் எல்எக்ஸ் ஒரு டிஜிட்டல் டாஷ்போர்டைப் பெறுகிறது. இது குறைந்தபட்ச பயணம் தொடர்பான தகவல்களைக் ஓட்டுனருக்கு காண்பிக்கிறது. இதன் 51.2 V மற்றும் 30 Ah பேட்டரியை 4-5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இது 85 கிமீ வரை நீடிக்கும். ஃப்ளாஷ் எல்எக்ஸ் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரி இரண்டும் 5 வருட உத்தரவாதத்துடன் வருகிறது.

ALSO READ |  சன்ரூஃப் & வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் அம்சங்களுடன் வரவிருக்கும் புதிய விட்டாரா பிரெஸ்ஸா

5. ஒகினாவா லைட் - Okinawa Lite (விலை: 63,990 எக்ஸ்-ஷோரூம்)

ஒகினாவா லைட் என்பது இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய மற்றொரு மின்சார ஸ்கூட்டர் ஆகும். இது பிரீமியம் வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் டேஷ்போர்டு, எல்இடி இண்டிகேட்டர்கள், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லாம்ப் போன்ற அம்சங்களுடன் வருகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.25 kWh லித்தியம்-அயன் பேட்டரியுடன் வருகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் செய்ய சுமார் 4-5 மணிநேரம் எடுக்கும் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை செல்லும் என்று கூறப்படுகிறது. ஒகினாவா லைட் ஐந்து வண்ணங்களில் வருகிறது. அவை பளபளப்பான சிவப்பு, பேர்ல் ப்ளூ, சன்ரைஸ் எல்லோ, ஆரஞ்சு லைட் மற்றும் கடல் பச்சை ஆகியவை ஆகும். ஒகினாவா 3 இலவச சேவைகள் மற்றும் பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது.

6. டெடேல் ஈஸி பிளஸ் - Detel Easy Plus (விலை: ரூ. 39,999)

Detel Easy Plus எலக்ட்ரிக் பைக் 20Ah லித்தியம்-அயன் பேட்டரியுடன் 250W மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4-5 மணி நேரம் எடுக்கும். இது 60 கிமீ வரம்பையும், மணிக்கு 25 கிமீ வேகத்தையும் வழங்குகிறது. ஈஸி பிளஸில் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், டியூப்லெஸ் டயர்கள், டிரம் பிரேக்குகள் மற்றும் பவுடர் பூசப்பட்ட உலோக அலாய் சேஸ் ஆகியவை உள்ளன. மின்சார வாகனம் உலோக சிவப்பு மற்றும் சில்வர் கிரே வண்ணங்களில் வருகிறது மற்றும் இந்த வாகனத்தை டோக்கன் தொகையான ரூ.1,999க்கு முன்பதிவு செய்யலாம். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1 வருட நிலையான உத்தரவாதத்துடன் வருகிறது. அதேசமயம் Detel பேட்டரிக்கு 2 ஆண்டுகள்/40,000கிமீ உத்தரவாதத்தை நிறுவனம் வழங்குகிறது.

ALSO READ |  புதிய வாகனங்களுக்கான பாரத் சீரிஸ் பதிவு அடையாளம் அறிமுகம் - யார் பயன் பெறலாம்?

இந்த மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு உங்களுக்கு ஏன் ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்பது தெரியுமா?

புதிய மத்திய மோட்டார் வாகன (பதினெட்டாவது) திருத்தத்தின் கீழ், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 250 வாட் மோட்டார் கொண்ட இ-ஸ்கூட்டர்களை ஓட்ட அனுமதிக்கும் வகை L1 ஐ மாற்றியுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீக்கு மேல் இல்லாத வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், இளம் ரைடர்ஸ் மத்தியில் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகளை ஊக்குவிக்க இந்திய அரசு முயற்சிக்கிறது. மேலும், வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாகவும், ஹெல்மெட் அணியவும் எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric bike, Electric car

அடுத்த செய்தி