பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் மாசுபாடு போன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த காரணத்தாலும், இன்னும் சில தேவைகளுக்காகவும் இரு சக்கர எலெக்ட்ரிக் வாகன உற்பத்திகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், இந்த வளர்ச்சி தடைபடக் கூடும் என்று புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை ரூ.45 ஆயிரம் வரை அதிகரிக்கக் கூடும் என்று கிரிஸில் என்ற அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதே சமயம், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த ஆதரவு என்பது எலெக்ட்ரிக் வாகனங்களை துரிதமாக ஏற்றுக் கொள்வது மற்றும் உற்பத்தியை பெருக்குவது ஆகிய நோக்கங்களுடன் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.
ALSO READ | ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 300 கி.மீ-க்கு மேல் செல்லும் புதிய இ-ஸ்கூட்டர்... பிரபல நிறுவனம் சூப்பர் அறிவிப்பு
அரசு ஆதரவு மட்டுமல்லாமல், பொருளாதாரச் சூழல், விற்பனைக்கு வரும் பல மாடல்கள், வீட்டிலேயே சார்ஜிங் செய்து கொள்வதற்கான வாய்ப்பு போன்ற காரணங்களாலும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறை அதிவேக வளர்ச்சியை கண்டு வருகிறது. தற்போது நாடெங்கிலும் பிரதான நெடுஞ்சாலைகளில் பொதுத்துறை பெட்ரோல் நிலையங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இனி தொலைதூர பயணங்களுக்கும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்கும்.
பாரம்பரிய வாகனங்களின் விலைக்கும், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலைக்கும் இடையே உள்ள மாபெரும் இடைவெளியை சரி செய்யும் விதமாக அரசின் மானியங்கள் இருக்கின்றன என்பதும், எலெக்ட்ரிக் வாகனங்களில் இண்டர்நெல் கம்ப்யூஷன் என்ஜின் இருப்பதும், அதன் உற்பத்தி அதிகரிப்பதற்கான காரணங்கள் என்று கிரிஸில் அறிக்கை தெரிவிக்கிறது.
ALSO READ | இந்தியாவில் Honda CB500X ப்ரீமியம் பைக் விலை அதிரடியாக குறைப்பு
2022 மற்றும் 2023 நிதியாண்டுகளில், மானியத் தொகை காரணமாக எலெக்ட்ரிக் வாகனத்தின் விலை என்பது மற்ற வாகனங்களை ஒப்பிடுகையில் ரூ.7,500 முதல் ரூ.9,500 வரையில் குறைவாக இருக்கும். ஆனால், அரசு வெளியிட்டுள்ள அட்டவணையின்படி இந்த மானியத் தொகை என்பது 2023ஆம் ஆண்டுடன் நிறுத்தப்படுகிறது.
மானியம் நிறுத்தப்பட்டால் விலை அதிகரிக்கும்
2023ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் நிறுத்தப்பட்ட பிறகு, அதன் விலை ரூ.45 ஆயிரம் வரை அதிகரிக்கும். 2023 மற்றும் 2025 ஆகிய நிதியாண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குகையில் அதன் மொத்த விலையில் ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை அதிகரிக்கக் கூடும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டம் நிறுத்தப்பட்ட பிறகு, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான மானியம் வழங்கப்பட உள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி எளிமையானது என்பதால், அந்த வாகனங்களுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.