அறிமுகத்துக்கு முன்னரே டெஸ்ட் ட்ரைவில் சிக்கிய எலெக்ட்ரிக் ஹோண்டா Jazz

ஹோண்டா ஜாஸ்

புதிதாக அறிமுகம் ஆகவுள்ள காரை டெஸ்ட் ட்ரைவ் செய்வதென்றால் காரின் அடையாளங்கள் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது வழக்கம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் என்ற எலெக்ட்ரிக் கார் ஒன்று அறிமுகத்துக்கு முன்னரே டெல்லி சாலைகளில் வலம் வந்துள்ளது.

ஆட்டோமோட்டார்ஸ் துறையிலும் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதற்கு அடையாளமாக வாரம் ஒரு எலெக்ட்ரிக் வாகன அறிமுகம் என்பது நடைமுறையாகி உள்ளது. டாடா-வின் டிகோர் முதல் மாருதி சுசூகியின் வேகன் ஆர் வரையில் தற்பொது ஒவ்வொரு நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த வரிசையில் ஹோண்டா நிறுவனமும் ‘ஜாஸ்’ என்ற புதிய வகை எலெக்ட்ரிக் காரை கொண்டு வர உள்ளது. ஆனால், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் முன்னரே ஜாஸ் கார் டெல்லி சாலைகளில் வலம் வந்துள்ளது. சாதாரணமாக, புதிதாக அறிமுகம் ஆகவுள்ள காரை டெஸ்ட் ட்ரைவ் செய்வதென்றால் காரின் அடையாளங்கள் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது வழக்கம்.

ஆனால், ஜாஸ் அசாதாரணமாக டெல்லியில் சுற்றிக்கொண்டிருந்துள்ளது. முதன்முறையாக ஹோண்டா நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இக்காரை அறிமுகம் செய்தது. ஆனால், ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் 2020-ம் ஆண்டு தான் வணிக நோக்கில் களம் இறக்கப்படும் அதுவும் சீனாவில் தான் முதலில் கொண்டு வரப்படும் என ஹோண்டா முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: போலீஸ் ஸ்டேஷன் முன் டிக் டாக் செய்து சிக்கலில் சிக்கிய இளைஞர்கள்!
Published by:Rahini M
First published: