பாதியாக குறையவிருக்கும் எலக்ட்ரிக் கார்களின் விலை - எப்போ தெரியுமா?

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எலக்ட்ரிக் வாகனம் திறந்து வைத்தபோது

புளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி 5 முதல் 7 வருடங்களில் வாகனங்களை பொறுத்து விலைகளில் மாற்றம் இருக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எலக்ட்ரிக் கார்களின் விலை வருகிற 5 முதல் 7 ஆண்டுகளில் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி 5 முதல் 7 வருடங்களில் வாகனங்களை பொறுத்து விலைகளில் மாற்றம் இருக்கும். குறிப்பாக 2025ம் ஆண்டின் போது எலக்ட்ரிக் இஞ்சின் வாகனங்கள் குறிப்பாக வேன் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்யூவி வகை கார்கள் 2026லும் சிறிய வகை கார்கள் 2027லும் குறைய வாய்ப்பு இருக்கிறதாம்.

தற்போது எலக்ட்ரிக் கார்கள் ரூ.36, 54,033 விலையில் இருக்கிறது. இது எரிபொருள் நிரப்பும் வாகனங்களை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனால் 2026 காலகட்டங்களில் இந்த தொகை பாதியாக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வாகன ஓட்டிகள் எலக்ட்ரிக் காரை வாங்க முயற்சிக்காததற்கு முக்கிய காரணம் அதன் விலை தான். ஆனால் 5 முதல் 7 வருடங்களில் விலை குறையுமானால் எல்லோருடைய சாய்ஸ்ம் எலக்ட்ரிக் கார்களாகத் தான் இருக்கும்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை ரூ.100 விலை எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகினர். மேலும் இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என மக்களை மறைமுகமாக பாதித்தது. ஆனால் மின்சார கார்களின் விலை குறைந்து பயன்பாடு அதிகமானால் பெட்ரோல், டீசல் விலையும் குறைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. பெட்ரோல், டீசல் என எரிபொருள் நிரப்பும் கார்கள் காற்று மாசு பாட்டை ஏற்படுத்துகிறது என்பது பொதுவாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.

மேலே சொன்ன தகவல்களின் படி எலக்ட்ரிக் கார்களின் விலை பாதியாக குறையுமானால் இன்னும் சில வருடங்களில் முழுமையாக எல்க்ட்ரிக் கார்களே பிரதானமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கார் மூலம் வெளியேறும் புகை உலகளவில் 25 சதவிகிதமாக இருக்கிறது.

Also read... கோவிட்-19 லாக்டவுன்: வாரன்ட்டி, சர்வீஸ் காலத்தை நீட்டித்துள்ள வாகன நிறுவனங்கள்!

இதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்த வண்டிகளுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்கத் திட்டமிட்டன. மேலும் எலக்ட்ரிக் கார்களில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடிய பொருட்கள் உள்ளன. குறிப்பாக பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம், கோபால்ட் போன்ற பொருட்களை மறு சுழற்சி செய்து பயன்படுத்தலாம்.

இப்படி மறு சுழற்சி செய்வது எதிர்காலத்தில் அதுவே ஒரு தொழிலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு நன்மைகள் உள்ள காரணத்தால் எலக்ட்ரிக் கார்களின் விலை குறையும்பட்சத்தில் அது சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை விளைவிக்கக் கூடியதாக பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: