• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புதிய கார்கள் விற்பனையில் எலக்ட்ரிக் கார்களின் பங்கு 54.3% : மிஷன் 2025ஐ நோக்கி வீறுநடை போடும் நார்வே!

புதிய கார்கள் விற்பனையில் எலக்ட்ரிக் கார்களின் பங்கு 54.3% : மிஷன் 2025ஐ நோக்கி வீறுநடை போடும் நார்வே!

உலகில் எந்தவொரு நாட்டிலும் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை பெட்ரோல் - டீசல் கார்களின் விற்பனை அளவை கடந்திராத நிலையில் நார்வேயில் புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது .

  • Share this:
பெட்ரோல், டீசல் கார்கள் இல்லாத நாடு என்ற  நிலையை அடையும் நோக்கில் மிஷன் 2025 என்ற இலக்குடன் பயணித்து வருகிறது நார்வே.

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எதிர்காலத்தின் தவிர்க்க முடியாத போக்குவரத்து சாதனங்களாக எலக்ட்ரிக் வாகனங்கள் இருக்கப்போகிறது என்பதே ஆட்டோமொபைல் துறையினரின் கருத்தாக உள்ளது.   சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத இதன் தன்மை காரணமாக பல்வேறு நாடுகள், எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.  டீசல், பெட்ரோல் வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள்
தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் கார்களை 2025ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிலிருந்து நீக்கும் முதல் நாடு என்ற பெருமையை அடையும் நோக்கில் நார்வே முனைப்புடன் பயணித்து வருகிறது.



நார்வே நாட்டில் 2020ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் எஞ்சின் கொண்ட கார்களின் விற்பனையை எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மிஞ்சியிருப்பது சமீபத்திய கார் விற்பனை தொடர்பாக வெளியான தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டில் மொத்த கார்களின் விற்பனையில் எலக்ட்ரிக் காகளின் பங்கு 54.3 % ஆக உள்ளது.இது 2019ம் ஆண்டில் 42.4% ஆக இருந்தது. இதுவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக எலக்ட்ரிக் வாகனங்களின் பங்கு 1% ஆக மட்டுமே நார்வேயில் இருந்தது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நார்வே அரசு முழுமையாக வரி விலக்கு அளித்ததும் கார் விற்பனையை அதிகரிக்க உதவியதாக இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை பெட்ரோல் - டீசல் கார்களின் விற்பனை அளவை
கடந்திராத நிலையில் நார்வேயில் புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது .

இந்தியாவிலும் Fame திட்டத்தின் மூலம் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகை அளித்து வருகிறது. முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடங்கி சிறிய நிறுவனங்கள் வரை புதிது புதிதாக எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. மக்களிடையேயும் இந்த வாகனங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: