புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகம் செய்யும் ஹீரோ சைக்கிள்ஸ்..!

18,999 ரூபாய் முதல் 26,999 ரூபாய் வரையில் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு உள்ளது.

புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகம் செய்யும் ஹீரோ சைக்கிள்ஸ்..!
(Image: Hero Cycles Ltd.)
  • News18
  • Last Updated: July 25, 2019, 2:27 PM IST
  • Share this:
புதிதாக எலெக்ட்ரிக் சைக்கிள்களை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

முதற்கட்டமாக ஹீரோ சைக்கிள்ஸ் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எலெக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளது. ‘லெட்ரோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள எலெட்ரிக் சைக்கிள்களை பிரிட்டிஷ் வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்ட்ள்ளது.

இந்தியாவில் ‘லெட்ரோ’ என்னும் எலெக்ட்ரிக் சைக்கிள் முன்னதாகவே விற்பனையில் உள்ளது. 18,999 ரூபாய் முதல் 26,999 ரூபாய் வரையில் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பு இருப்பதால் பிரிட்டனைத் தொடர்ந்து ஜப்பான் உற்பத்தியாளர்கள் உடனும் ஏற்றுமதி ஒப்பந்தம் மேற்கொள்ள ஹீரோ சைக்கிள்ஸ் ஆலோசித்து வருகிறது.


இதுகுறித்து ஹீரோ சைக்கிள்ஸ் தலைவர் பங்கஜ் முன்ஜால் கூறுகையில், “முதற்கட்டமாக லண்டனுக்கு 45 ஆயிரம் லெக்ட்ரோ சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. லண்டனைச் சேர்ந்த அவோசெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பார்க்க: லைசென்ஸ் இல்லையா ₹5 ஆயிரம்... குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ₹10 ஆயிரம் அபராதம்!
First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading