2030-க்குள் அனைத்து வாகனங்களும் மின்சாரத்தில் இயங்கும் – மத்திய அமைச்சர்

news18
Updated: May 31, 2018, 8:22 PM IST
2030-க்குள் அனைத்து வாகனங்களும் மின்சாரத்தில் இயங்கும் – மத்திய அமைச்சர்
news18
Updated: May 31, 2018, 8:22 PM IST
வரும் 2030-க்குள் நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களும் மின்சாரத்தில் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசுக்கு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வழங்குவது தொடர்பாக அந்த மாநில அரசுக்கும், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, இஇஎஸ்எல் ஆகிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


தொடர்ந்து, அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“வரும் 2030-க்குள் நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களையும் மின்சாரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்” என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் பயன்பாட்டுக்கு விடப்படும். மேலும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த  திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Loading...

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு பெருமளவில் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: May 31, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...