பிரபல எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான இ பைக் கோ நிறுவனம் மின்சார இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலில் பிரபலமாகவுள்ளனர். அந்த நிறுவனம் தற்போது மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. டிரான்சில் பிராண்டின்கீழ் டிரான்சில் இ1 எனும் எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது இ பைக் கோ நிறுவனம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிளின் விலை 45 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை கொஞ்சம் அதிகம் தான் என்றாலும், இந்த சைக்கிளில் அதற்கேற்றார் போல் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஆண், பெண் என ரெண்டு பேரும் இந்த சைக்கிளை எளிதாக ஓட்டலாம். நகர்புறவாசிகளைக் கருத்தில் கொண்டே டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த எலக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு வர உள்ளது.
ஸ்டீல் ஃப்ரேமைக் கொண்டு இ-சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளதால் சைக்கிளின் உறுதித் தன்மை அதிகம். டபுள் வால்லட் அலாய் ரிம்கள் கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் லித்தியம் இயன் பேட்டரி, பிஎம்எஸ் வசதி என பல்வேறு அம்சங்கள் இந்த சைக்கிளில் இருக்கின்றன. இந்த சைக்கிளில் உள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை தேவைப்படும்.
பேட்டரி முழு சார்ஜுக்கும் 0.18 யூனிட்டே செலவாகும். அப்படி என்றால் ஒரு கிமீட்டருக்கு 5 பைசா தான் செலவு.
மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த சைக்கிளில் உள்ளன. க்ரூஸ், வாக் மற்றும் த்ராட்டில் எனும் மூன்று விதமான இயக்க மோட்டார் தான் அவை. இந்த சைக்கிளை எளிதில் வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக ஸ்மார்ட் சார்ஜரும் வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன் தானாகவே கட்-ஆஃப் ஆகும் வசதி கொண்டது. இதுதவிர டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிளில் ஓர் சிறிய எல்இடி ஸ்மார்ட் திரை ஒன்றும் உள்ளது. இந்த திரை வாயிலாக பல்வேறு முக்கிய தகவல்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, சைக்கிளின் வேகம், நேரம், பேட்டரி அளவு போன்ற முக்கிய தகவல்களை இந்த திரை வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் எலக்டரிக் சைக்கிளை உருவாக்கியுள்ளது இ பைக் கோ நிறுவனம். விரைவில் ஷோ ரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த சைக்கிள் பலரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Bicycle, Electric bike, Smart bike