முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / காரின் மைலேஜை அதிகப்படுத்த சில டிப்ஸ்…இனி நோ டென்ஷன்..

காரின் மைலேஜை அதிகப்படுத்த சில டிப்ஸ்…இனி நோ டென்ஷன்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆசையாக வாங்கிய காருக்கு பெட்ரோல், டீசலுக்கு அதிகம் செலவிட முடியாமல் தவிக்கும் மக்கள் இங்கு அதிகம். அவர்களுக்காக இந்த பதிவு…

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசையாக வாங்கிய காருக்கு பெட்ரோல், டீசலுக்கு அதிகம் செலவிட முடியாமல் தவிக்கும் மக்கள் இங்கு அதிகம். அவர்களுக்காக இந்த பதிவுஇந்தியாவை பொருத்தவரை கார் என்பது நடுத்தர மக்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் சிம்பள். கார் வைத்திருப்பது கெத்து என்பதால் கடனை உடனை வாங்கியாவது காரை வாங்கி விடுகிறோம்.

ஆனால் அதன் பராமரிப்பு செலவு நமது பட்ஜெட்டை பதம் பார்க்கும் போது கார் நமக்கு கசப்பாகி விடுகிறது. அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இதை படியுங்கள். நாம் வைத்திருக்கும் காரை பராமரிப்பதிலும், காரை ஓட்டுவதிலும் சில நடைமுறைகளை தவறாமல் கடைப்பித்தாலே கார் நமக்கு கசக்காது. அப்படிப்பட்ட சில டிபஸ்கள் உங்களுக்காக இதோ.

Read More : ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை ஆன்லைனில் இணைக்க முடியுமா? விவரங்கள் இதோ

இந்தியாவை பொருத்தவரை நடுத்தர மக்கள் வாங்கும் காரின் முதல் தகுதியே அதிக மைலேஜ் தான். அதிக மைலேஜ் காரைத் தான் விரும்பி வாங்குகிறார்கள். ஆனால் வாங்கிய பிறகு இன்னும் அதிக மைலேஜ் தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது தவறு…

நமது காரின் மைலேஜை குறையாமல் தக்கவைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். அதற்கு பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

மைலேஜ் மேனேஜ் மென்டடில் முக்கயமானது காரை ஓட்டும் முறை. சர்புர் என காரை ஓட்டுவதும், சடன் பிரேக் போடுவதும் ஒரு போதும் கூடாது. இது காரின் மைலேஜூக்கும் ஆபத்து. நமக்கும் ஆபத்து. எப்போதும் சீரான வேகத்தில் காரை ஓட்டுவது தான் சிறந்த மைலேஜ் தரும்.
அடுத்ததாக பராமரிப்பு. சரியான இடைவெளியில் காரில் ஆயில், பில்டர்கள், ஸ்பார்க் பிளக்குகள் இவற்றை பரிசோதித்து, தேவைப்பட்டால் மாற்றி காரை பராமரிக்க வேண்டும். இது தான் காரின் லைஃபையும், நமது பர்சையும் பாதுகாக்கும். தரமான எரிபொருளளை பயன்படுத்துவதும் முக்கியம்.
குறிப்பிட்ட தூரத்திற்குள்ளேயே நம் காரை பயன்படுத்துகிறோம் என்றால் நாம் இருக்கும் லொகேசனில் எங்கு  கலப்படம் இல்லாத எரிபொருள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த தரமான எரிபொருளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
காரின் மைலேஜில் காரில் இருக்கும் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது காரில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றி விட்டு காருக்கு அழுத்தம் தரக் கூடிய விசயங்களை தவிர்த்து விட்டு தயாரிப்பாளர் கொடுத்த அறிவுரையின் படி நமது காரின் எடையை மெயின்டன் செய்தாலே எரிபொருள் செலவை கட்டுப்படுத்தலாம்.
இது போன்ற நம்மால் எளிதில் செய்யக் கூடிய விசயங்களை செய்து வந்தாலே நமது காரின் மைலேஜ் குறையாமல் நம்மால் பார்த்துக் கொள்ள முடியும். 
First published:

Tags: Automobile, Car